கருணாநிதி நினைவு தினம்: தி.மு.க., அமைதி பேரணி

Added : ஆக 08, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை-முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை ஒட்டி, சென்னையில் நேற்று, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடந்தது.கருணாநிதியின், நான்கா-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை, ஓமந்துாரார் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழ், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மலர் துாவி மரியாதை
கருணாநிதி நினைவு தினம்: தி.மு.க., அமைதி பேரணி

சென்னை-முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை ஒட்டி, சென்னையில் நேற்று, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடந்தது.

கருணாநிதியின், நான்கா-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை, ஓமந்துாரார் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழ், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்ற அமைதி பேரணி, ஓமந்துாரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து புறப்பட்டது.

காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தை அடைந்ததும், பேரணியில் பங்கேற்ற முதல்வர் உள்ளிட்டோர், கருணாநிதி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.பின், அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கும், மலர் துாவி மரியாதை செய்தனர்.மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையருக்கும் நலத்திட்ட உதவிகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தி.மு.க., அதிகாரப்பூர்வ நாளிதழான, 'முரசொலி' வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கும் மலர் துாவி மரியாதை செய்யப்பட்டது. 'நினைவில் வாழும் கலைஞர்' எனும் சிறப்பு மலரை, துரைமுருகன் வெளியிட, முரசொலி செல்வம் பெற்றுக் கொண்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
08-ஆக-202213:55:44 IST Report Abuse
Vena Suna கருணாநிதி உண்மையான வயது நூறு. அவர் பிறந்தது ஜூன் 3,1922. அப்புறம்,வயதை 1924 என்று மாற்றி விட்டனர்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
08-ஆக-202213:50:19 IST Report Abuse
jayvee புரட்டாசி மாத திருப்பதி ஊர்வலத்தை நினைவு படுத்தியது... குடை மட்டும்தான் காணோம்
Rate this:
Cancel
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
08-ஆக-202213:14:14 IST Report Abuse
Neutrallite தயிர் வட கொண்டு போனீங்களா பகுத்தறிவோடு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X