மாநகர பஸ் மோதியதால் திடீர் விபத்து: வழிகாட்டி பலகை விழுந்து 6 பேர் காயம்

Added : ஆக 08, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை--சென்னை ஜி.எஸ்.டி., சாலை, ஆலந்துார் ஆசர்கானா பஸ் நிறுத்தம் அருகில், மாநகர பஸ் மோதி, வழிகாட்டி பலகை கம்பம் விழுந்ததில், ஆறு பேர் காயமடைந்தனர். இதில், ஒருவர் அபாய கட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.சென்னை ஜி.எஸ்.டி., சாலையில், ஆலந்துார் ஆசர்கானா பஸ் நிறுத்தம் எதிரே, ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கிய இந்த சாலையில்,
மாநகர பஸ் மோதியதால் திடீர் விபத்து: வழிகாட்டி பலகை விழுந்து 6 பேர் காயம்

சென்னை--சென்னை ஜி.எஸ்.டி., சாலை, ஆலந்துார் ஆசர்கானா பஸ் நிறுத்தம் அருகில், மாநகர பஸ் மோதி, வழிகாட்டி பலகை கம்பம் விழுந்ததில், ஆறு பேர் காயமடைந்தனர்.

இதில், ஒருவர் அபாய கட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.சென்னை ஜி.எஸ்.டி., சாலையில், ஆலந்துார் ஆசர்கானா பஸ் நிறுத்தம் எதிரே, ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கிய இந்த சாலையில், ஆசர்கானா பஸ் நிறுத்தத்திற்கு முன், 200 அடி துாரத்தில் அபாய வளைவு உள்ளது.தீவிர சிகிச்சை பிரிவுஇதையொட்டி, சாலையின் குறுக்கே, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 20 அடி உயர வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டது.

அதில், பாரிமுனை, கிண்டி, கோயம்பேடு இடத்திற்கான, துாரம், திசை குறியீடு இடம் பெற்றிருந்தது. இந்த வழியாக, நேற்று மாலை 3:00 மணிக்கு, தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் தடம் எண்: 70வி மாநகர பஸ் சென்றது. ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ரகுநாதன், 47, என்பவர் பஸ்சை ஓட்டிச் சென்றார். சின்னையன், 50, என்பவர் நடத்துனராக இருந்தார்.அபாய வளைவில் அதிவேகமாக சென்ற பஸ், எதிர்பாராத விதமாக நடைபாதையில் ஏறி, வழிகாட்டி பலகையின் இரும்பு கம்பத்தில் மோதியது. இதில், தரைமட்டத்துடன் பெயர்ந்த இரும்பு துாண், வழிகாட்டி பலகையுடன் சாலை மீடியன் குறுக்கே விழுந்தது.

அப்போது, பல்லாவரத்தில் இருந்து கிண்டி நோக்கி, 'ப்ரைஸ் ப்ரோ' எனும், 'எலக்ட்ரிக் மாடல்' இரு சக்கர வாகனத்தில் சென்ற 30 வயது மதிக்கத்தக்க நபர், வழிகாட்டி பலகை கம்பத்தின் அடியில் வாகனத்துடன் சிக்கினார். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.வாகன நம்பரை வைத்து, அவரின் பெயர் சண்முக சுந்தரம், 30, என போலீசார் தெரிவித்தனர். ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து பாதிப்புஅதேபோல, கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற, லோடு ஆட்டோவும் சேதமடைந்தது.

இதை ஓட்டி சென்ற மதுரவாயலைச் சேர்ந்த ஜான் பீட்டர், 40, மற்றும் பஸ்சில் இருந்த நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.இவர்களை, போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து, ஆம்புலன்ஸ் வரவழைத்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்துக்கு காரணமான ஓட்டுனர் ரகுநாதன் மற்றும் நடத்துனர் சின்னையா ஆகியோர், சம்பவத்தின் வீரியத்தை உணர்ந்து, அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த விபத்து சம்பவத்தால், ஜி.எஸ்.டி., சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில் நேற்று இரவு பேருந்து ஓட்டுனர் ரகுநாதன் கைது செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.தவிர்ப்பு!


பொதுவாக, ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கத்தை விட குறைவாக வாகனங்கள் சென்றன. அதே வேளையில், அலுவல் நாட்களில் இதே விபத்து நடந்திருந்தால், 5,000 கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட, வழிகாட்டி பலகை விழுந்ததில் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.ஓட்டுனர் மயங்கினாரா?

போக்குவரத்துத் துறையில் இருந்து வந்த அதிகாரிகள், ஓட்டுனர் மயங்கியதால் ஏற்பட்ட விபத்து என்று கூறினர். இதைக் கேட்டதும், விபத்தில் சிக்கிய இரண்டு பேரை, மருத்துவமனைக்கு அனுப்பிய பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 'மயங்கியவர் எப்படி தப்பி ஓட முடியும்? எங்களுக்கு தெரியாதா, மயங்கி இருந்தால், நாங்கள் தானே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி இருப்போம்' என்று கேட்டதும், அதிகாரிகள் மவுனமாகினர்.உறுதி தன்மை கேள்விக்குறி!

இரண்டு ஆண்டுகளுக்கு முன், வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டு உள்ளது. 20 பலகைகளை தாங்கும் வகையில், 20 அடி உயரத்தில், சாலையோரம் மற்றும் மைய தடுப்பில், 1 அடி சுற்றளவில் இரும்பு துாண் அமைக்கப்பட்டிருந்தது. பஸ் மோதிய வேகத்தில், இரும்பு துாணின் தரைப்பகுதியில் இருந்த உள்கம்பி முறிந்து, 'கான்கிரீட்' கட்டமைப்பு பெயர்ந்தது. பஸ் மோதி, அவ்வளவு பெரிய இரும்பு துாண் சாயுமா என்ற கேள்வி எழுந்தது.இதனால், நெடுஞ்சாலைத் துறையினர், இரும்பு துாண் மற்றும் கான்கிரீட் கட்டமைப்பின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்து உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
08-ஆக-202210:32:53 IST Report Abuse
தமிழ்வேள் தற்போதைய புதிய சிவப்பு வண்ண பேருந்துகள் மாநகர எல்லைக்குள்ளேயே சுமார் 80 கி மீ வேகத்தை எட்டுகின்றன. இந்த வேகம் குறைக்கப்படாவிட்டால், இன்னும் உயிர்கொல்லி விபத்துக்கள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.. சிட்டி லிமிட்டுக்குள் அதிகபட்சம் 45 கி.மீ வேகத்துக்கு மேல் செல்வது என்றும் ஆபத்தானதே..
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
08-ஆக-202210:05:32 IST Report Abuse
Narayanan பேருந்து மோதி கம்பம் சாய வாய்ப்பில்லை. என்றாலும் கம்பம் அமைத்திருந்த விதம் கேலிக்குறியது என்பது உண்மை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X