'தவறு செய்யவில்லை என்றால் தி.மு.க., ஏன் பயப்பட வேண்டும்?'

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (50) | |
Advertisement
சென்னை : ''தவறு செய்யவில்லை என்றால், அமலாக்கத் துறை, சி.பி.ஐ., விசாரணைக்கு ஏன் பயப்பட வேண்டும்?'' என, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.சென்னை வடபழநியில் நேற்று, பா.ஜ., பிற மொழிகள் பிரிவு நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற பின், முருகன் அளித்த பேட்டி:பல
திமுக,  அமைச்சர் எல் முருகன்,பாஜ, பாரதிய ஜனதா , DMK, Minister L Murugan, BJP, Bharatiya Janata,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : ''தவறு செய்யவில்லை என்றால், அமலாக்கத் துறை, சி.பி.ஐ., விசாரணைக்கு ஏன் பயப்பட வேண்டும்?'' என, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.சென்னை வடபழநியில் நேற்று, பா.ஜ., பிற மொழிகள் பிரிவு நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.

அதில் பங்கேற்ற பின், முருகன் அளித்த பேட்டி:பல மொழிகள் பேசும் மக்கள், சென்னையில் லட்சக்கணக்கானோர் குடியேறியுள்ளனர். 100 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் வசிப்பவர்களும் இருக்கின்றனர். பிற மொழி பேசும் மக்களிடம், பா.ஜ., நன்கு வளர்ந்துள்ளது. அவர்களிடம் பா.ஜ.,வை வளர்க்கும் பணியில், பிற மொழிப்பிரிவு ஈடுபட்டுள்ளது. அந்த பணிகளை திட்டமிடவும், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


latest tamil news


நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்களின் தியாகங்களை போற்றும் வகையில், வீடுதோறும் தேசியக் கொடி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதிகம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள், 75 பேர் பற்றிய நிகழ்ச்சி, துார்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபாக உள்ளது. பிரதமரின் அழைப்பை ஏற்று, அனைவரும் தேசியக் கொடியேற்ற வேண்டும்.மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தி வரும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது, காவல் துறையில் புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்கப் போவதாக, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். இதை, கேள்வி கேட்கும் எதிர்க்கட்சியினரை, காவல் துறையை வைத்து முடக்கும் செயலாகவே பார்க்கிறேன்.அமலாக்கத் துறையும், சி.பி.ஐ., அமைப்பும் சுதந்திரமான விசாரணை அமைப்புகள். அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் புகார்கள், தகவல்கள், ஆதாரங்கள் அடிப்படையில் சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.

அதற்கும், பா.ஜ.,வுக்கும் தொடர்பில்லை.தவறு செய்யவில்லை என்றால், மடியில் கனமில்லை என்றால், அமலாக்கத் துறை, சி.பி.ஐ., வருமான வரித் துறையை பார்த்து, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏன் பயப்பட வேண்டும்? தவறு செய்யவில்லை என்றால், யாரும் பயப்படத் தேவையில்லை.ஆர்.எஸ்.எஸ்., அலுவலகங்களில், தேசியக் கொடியேற்றுவரா என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ்., சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. 75-வது சுதந்திர தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு தேசியக் கொடிகளை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு வழங்கி வருகிறது. தேசியக் கொடி பற்றி ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்திற்கு, திருமாவளவன் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு முருகன் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
08-ஆக-202216:56:51 IST Report Abuse
சீனி சிபிஐ அலேக்காக தூக்கும் போது, "ஐயோ கொல்லுறாங்களே" என்ற அலறல் கேட்கும்... ஹாஹாஹா....
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
08-ஆக-202215:44:27 IST Report Abuse
Vena Suna ராமசாமி ஒரு சாதாரண கேவலமான ஆள். அவனை நம்பறவனும் அப்படியே.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
08-ஆக-202213:39:56 IST Report Abuse
jayvee குற்றம் செய்துவிட்டு பயப்பட திமுக ஒன்றும் அதிமுக இல்லை.. நாங்கள் திமுக..
Rate this:
mani - melarasur, Trichy,இந்தியா
08-ஆக-202215:10:44 IST Report Abuse
mani ஒ திருடர்கள் முன்னேற்ற கழகமா???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X