மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை:நீலகிரியில் 400 மரங்கள் அகற்றம்

Added : ஆக 08, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஊட்டி,--நீலகிரி மாவட்டத்தில், விழும் நிலையில் இருந்த, 400 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.நீலகிரியில், தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்கிறது. ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார் உட்பட மாவட்ட முழுதும் விழும் நிலையில் உள்ள, 660 மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதுவரை, 400 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. ஊட்டி தமிழக சாலை, சர்ச் ஹில், முள்ளிக்கொரை பகுதிகளில், அபாய
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை:நீலகிரியில் 400 மரங்கள் அகற்றம்

ஊட்டி,--நீலகிரி மாவட்டத்தில், விழும் நிலையில் இருந்த, 400 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

நீலகிரியில், தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்கிறது. ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார் உட்பட மாவட்ட முழுதும் விழும் நிலையில் உள்ள, 660 மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதுவரை, 400 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. ஊட்டி தமிழக சாலை, சர்ச் ஹில், முள்ளிக்கொரை பகுதிகளில், அபாய நிலையில் உள்ள மரங்கள் அகற்றப்படுகின்றன.நேற்று காலை, 8:00 மணி வரையிலான, 24 மணி நேரத்தில், அவலாஞ்சியில், 10.6 செ.மீ., மேல் பவானியில், 10.5 செ.மீ., மழை பதிவானது.

மஞ்சூர்-- - ஊட்டி சாலையில், சாம்ராஜ், பாலகொலா சந்திப்பு, கைகாட்டி பகுதிகளில், மூன்று இடத்தில் மரங்கள் விழுந்து மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர், மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார் பகுதிகளில், மழை காரணமாக நேற்று, 10 வீடுகள் சேதமடைந்தன. அதற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறுகை யில், ''மழை தொடர்வதால், 42 பேரிடர் கண்காணிப்பு சிறப்பு குழுவினர், மாவட்டம் முழுதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுஉள்ளனர். ''எந்த பகுதியில் பாதிப்பு இருந்தாலும், மக்கள் அப்பகுதியில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று தங்கலாம்,'' என்றார்.


கடும் மழை, குளிரால் 'வெறிச்'

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்காவுக்கு வார நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வருவது வழக்கம்.கேரளா, கர்நாடகாவில் தற்போது மழை பெய்கிறது. ஊட்டியில் மழையுடன், கடும் குளிர் நிலவுகிறது. இதனால், நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, சுற்றுலா பயணியர் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.இதர சுற்றுலாத் தலங்களும் வெறிச்சோடின. சொற்ப எண்ணிக்கையிலான சுற்றுலா பயணியரும் விடுதி அறைகளில் முடங்கினர். கடும் குளிரால், உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
08-ஆக-202212:58:05 IST Report Abuse
raja எங்கேப்பா... திருட்டு திராவிட கொள்ளையனின் பசுமை ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் சமூக போராளிகள் ஒருத்தனைக் கூட காணோம் அவன் பேரென்ன பியூஸா எதுக்கெடுத்தாலும் முந்திரி கொட்டை போல போன ஆட்சியில வந்தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X