சுருளி அருவியில் குளிக்க 7வது நாளாக தடை :வனத்துறையினர் கண்காணிப்பு

Added : ஆக 08, 2022 | |
Advertisement
கம்பம்-தேனி மாவட்டம் சுருளி அருவியில் 7 வது நாளாக குளிக்க தடை தொடர்கிறது. அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால், வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஒரு மாதமாக சாரல் மழை பெய்த போதும், கடந்த 10 நாட்களாக தான் மேகமலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவங்கலாறு பகுதியில் கனமழை பெய்து வருவதால் சுருளி அருவியில் ஒரு வாரத்திற்கு முன் வெள்ளப்பெருக்கு
சுருளி அருவியில் குளிக்க 7வது நாளாக தடை :வனத்துறையினர் கண்காணிப்பு

கம்பம்-தேனி மாவட்டம் சுருளி அருவியில் 7 வது நாளாக குளிக்க தடை தொடர்கிறது. அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால், வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு மாதமாக சாரல் மழை பெய்த போதும், கடந்த 10 நாட்களாக தான் மேகமலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவங்கலாறு பகுதியில் கனமழை பெய்து வருவதால் சுருளி அருவியில் ஒரு வாரத்திற்கு முன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளை அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.

நேற்றுடன் ஏழாவது நாளாக இத்தடை தொடர்கிறது.வனத்துறை ரேஞ்சர் சாந்தினி கூறியதாவது: அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது. இரவங்கலாறு பகுதியில் மழையும் தொடர்ந்து பெய்கிறது. அருவிப் பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க கண்காணித்து வருகிறோம். அருவியில் விழும் தண்ணீரின் அளவு குறைந்தால் மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்படும். சுற்றுலா பயணிகளிடம் நிலைமையை விளக்கி திருப்பி அனுப்பி வருகிறோம் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X