இது உங்கள் இடம்: பிள்ளையை கிள்ளியவர்கள் தொட்டிலை ஆட்டுவதா?

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (44) | |
Advertisement
உலகம், நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம் முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்வு பயம், பாலியல் வன்முறை மற்றும் காதல் தோல்வியால், மாணவியர் தற்கொலை செய்து கொள்வது தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கான தீர்வை பலரும் கூறிவரும் நிலையில், நடிகை கஸ்துாரியும் தன் பங்கிற்கு ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலகம், நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்



முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தேர்வு பயம், பாலியல் வன்முறை மற்றும் காதல் தோல்வியால், மாணவியர் தற்கொலை செய்து கொள்வது தற்போது அதிகரித்து வருகிறது.



latest tamil news



இதற்கான தீர்வை பலரும் கூறிவரும் நிலையில், நடிகை கஸ்துாரியும் தன் பங்கிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதில், 'மாணவியரின் தற்கொலைகள், தொலைக்காட்சிகளில் முதன்மை செய்தியாக அடிக்கடி காட்டப்படுகின்றன. இது, தற்கொலை எண்ணம் இல்லாத மாணவியருக்கும், அந்த எண்ணத்தை வரவழைத்து விடும்' என்று கூறியுள்ளார்.

அவரின் கருத்து ஒரு வகையில் சரியானதாக இருந்தாலும், மாணவியரின் தற்கொலைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டதே சினிமா தானே... இதை, நடிகை கஸ்துாரி அறிவாரா? இலைமறை, காய்மறையாக இருந்த கவிஞர்களின் காதல் கருத்துகளை வெளிச்சம் போட்டுக் காட்டி, காதலுக்கு முதல் மரியாதை தந்ததுடன், காதல் தோல்வி என்றால், உயிரை மாய்த்துக் கொள்ளச் சொன்னதும் சினிமா தான். வாழ்வின் ஒரு பகுதி காதல் என்று சொல்லாமல், காதல் தான் எல்லாமே என்று பொய் பிரசாரம் செய்து, காதல் இல்லையேல் சாதல் என்ற தவறான முடிவை இளைஞர்கள் எடுக்க வைத்ததும் சினிமாவே.

நவராத்திரி சாவித்திரி முதல், நவீன சினிமா கதாநாயகி வரை காதல் தோல்விக்கு தீர்வாக காண்பது தற்கொலையை தான். சினிமா என்ற மாயாஜாலத்தில் மதி மயங்கி வாழ்க்கையை தொலைத்தோர் பலர். பொழுதுபோக்கு சாதனமாக நாட்டில் நுழைந்து, மக்கள் மனதை எல்லாம் பழுதாக்கி விட்டது சினிமா. கல்விக் கூடங்களை, காதலன் காதலிக்கான கலவிக் கூடங்களாக்கி, கல்லுாரிக்கு போவதே காதலிக்கத் தான் என்ற பிரமையை தோற்றுவித்ததும் சினிமாவே.

இப்படிபட்ட நிலையில், சினிமா துறையைச் சேர்ந்த கஸ்துாரி, இன்றைய மாணவியரின் தற்கொலைகளுக்கான காரணத்தை வேறெங்கோ தேடுவது வேடிக்கை. உங்கள் சினிமா உலகம் விதை போட்டு நீரூற்றி வளர்த்த பயிருக்கு தான், தற்போது ஊடகங்கள் உரம் இடுகின்றன. கஸ்துாரி சொல்வது போல, மாணவியருக்கு ஆலோசனை வழங்க, கல்லுாரிகளில், பள்ளிகளில் குழுக்கள் அமைத்து செயல்படுவது காரியத்துக்கு ஆகாது.


latest tamil news



இது, வெறும் புண் அல்ல; களிம்பு தடவி குணப்படுத்த; புரையோடிப் போன கட்டி. உண்மையிலேயே மாணவ - மாணவியரின் நலனில் அக்கறை காட்டுவதாக இருந்தால், முதலில் எரிகிற கொள்ளியை பிடுங்க வேண்டும்; உலை தானாக அடங்கும். ஆம்... சமுதாயத்தை சீர்குலைக்கும் தரம் கெட்ட திரைப்படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் தடை செய்ய வேண்டும். செய்ய முடியுமா... முடியாது.

சினிமா கம்பெனிகளையும், சாராய கடைகளையும் அரசியல்வாதிகளும், அரசும் நடத்தும் போது, இதற்கெல்லாம் வாய்ப்பில்லை. மாணவியர் தற்கொலைகளுக்கு, சினிமா துறையைச் சேர்ந்த கஸ்துாரி போன்றோர் தீர்வு சொல்வது, பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவது போன்றதாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekaran - Chennai,இந்தியா
08-ஆக-202221:08:16 IST Report Abuse
Rajasekaran பாராட்டுக்கள்
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
08-ஆக-202221:07:37 IST Report Abuse
Rajasekaran கடைசிப் பகுதியில் பொட்டில் அடித்தாற்போல சொல்லி இருக்கிறார் பாராட்டப்பட வேண்டியவர்
Rate this:
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
08-ஆக-202220:52:35 IST Report Abuse
Sathyanarayanan Subramanian சினிமா மற்றும் தமிழ் சின்னத்திரை சீரியல்கள் தான் முக்கிய காரணம் தற்போதைய பாலியல் தொடர்பான குற்றங்கள் தற்கொலை ஆகியவை அடங்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X