இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்: ஹவாலா பணம் ரூ.52 லட்சம் பறிமுதல்| Dinamalar

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': ஹவாலா பணம் ரூ.52 லட்சம் பறிமுதல்

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (3) | |
இந்திய நிகழ்வுகள்பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவர் கைது புதுடில்லி-ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவரை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு புதுடில்லியில் கைது செய்துள்ளது.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவோர், நிதி திரட்டுவோர் குறித்து, என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது. சமீபத்தில் மத்திய பிரதேசம், குஜராத்,


இந்திய நிகழ்வுகள்
பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவர் கைதுlatest tamil newsபுதுடில்லி-ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவரை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு புதுடில்லியில் கைது செய்துள்ளது.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவோர், நிதி திரட்டுவோர் குறித்து, என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது. சமீபத்தில் மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா உட்பட ஆறு மாநிலங்களில் பல இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.இந்நிலையில் புதுடில்லியில் மோஷின் அஹமது என்பவரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இவர் பீஹாரின் பாட்னாவைச் சேர்ந்தவர். தீவிர மதப்பற்றாளராக மாறிய இவர், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட துவங்கினார்.ஐ.எஸ்., அமைப்புக்காகஉள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இவர் நிதி வசூலித்து வந்துள்ளார். தொடர் கண்காணிப்புக்கு பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஐ.எஸ்., அமைப்பின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தமிழக நிகழ்வுகள்
ஹவாலா பணம் ரூ.52 லட்சம் பறிமுதல்சென்னை : ரயிலில் எடுத்து வரப்பட்ட ஹவாலா பணம், 52 லட்சம் ரூபாயை, எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர்.latest tamil newsஆந்திர மாநிலம் கூடூரில் இருந்து, சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்துக்கு, நேற்று சர்கார் விரைவு ரயில் வந்தது.அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் குல்தீப்சிங் பால், ரமேஷ், ஜோதி பாண்டே, சீர்சா ஆகியோர், ரயிலில் இருந்து இறங்கிய நபரை பிடித்து விசாரித்தனர்.அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த ஆர்.பி.எப்., போலீசார், அந்த நபர் வைத்திருந்த கறுப்பு நிற பையை சோதனை செய்தனர்.

அதில், 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. இதையடுத்து, ஆர்.பி.எப்., அலுவலகத்துக்கு அழைத்து வந்து, அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், பிடிபட்ட நபர் ஆந்திர மாநிலம், நெல்லுாரைச் சேர்ந்த வெங்கட சந்தீப் குமார், 36 என்பது தெரிய வந்தது. அவரிடம், ௫1 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரூபாய் இருப்பதும், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.

உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்தனர்.அதையடுத்து, அந்த பணத்தை வருமான வரித் துறை புலனாய்வு பிரிவு அதிகாரி பி.பாலசந்திரனிடம், எழும்பூர் ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் எல்.எஸ்.சிவநேசன் ஒப்படைத்தார்.ஹவாலா பணமா என்பது குறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். பிடிபட்ட நபர், கூடூர்- - சென்னை சென்ட்ரல் இடையே பயணிக்க, மாதாந்திர 'பாஸ்' வைத்திருந்தது தெரியவந்துள்ளது.


ஓட்டல் ஊழியர் கொலை; ரவுடிகள் 7 பேர் கைதுதூத்துக்குடி, -தூத்துக்குடி காமராஜ்நகரில் கருப்பசாமி என்பவர் இரவு ஓட்டல் நடத்துகிறார். முடிவைத்தானேந்தல் செந்தில் முருகன், மடத்தூர் தேவராஜ், சாயர்புரம் சாமுவேல் நேற்று முன் தினம் இரவு ஓட்டலில் பணியில் இருந்தனர்.தூத்துக்குடி 3ம் மைலை சேர்ந்த கும்பல் பரோட்டா சாப்பிட்டனர். பின் ஓசிக்கு புரோட்டா பார்சல் கேட்டு போதையில் தகராறில் ஈடுபட்டனர். அங்கிருந்து சென்ற அவர்கள் இரவு 11:30 மணிக்கு திரும்பி வந்து ஓட்டல் ஊழியர்களை அரிவாளால் வெட்டினர். ஊழியர் செந்தில்முருகன் இறந்தார். தேவராஜ், சாமுவேல், பக்கத்து கடைக்காரர் பழனிமுருகனுக்கு வெட்டு விழுந்தது. இதில் ஈடுபட்டதாக தினேஷ் 23, ராபர்ட் ரகு 23, மிக்கேல் அந்தோணி 23, அந்தோணிராஜ் 21, விஷ்ணு 19 உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.


பாத்திர கடைக்காரரை கடத்தி ரூ.5 லட்சம் பறிப்பு:போலி போலீஸ் கும்பல் கைது; தனிப்படைக்கு பாராட்டுதூத்துக்குடி -துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போலீஸ் எனக்கூறி பாத்திரக்கடைக்காரர் தங்கத்தை 62, மிரட்டி காரில் கடத்தி ரூ.5 லட்சத்தை பறித்த பெங்களூருவை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று முன் தினம் மதியம் 1:30 மணியளவில் கோவில்பட்டியில் நடராஜபுரம் தங்கம் பாத்திரக்கடையில் இருந்த போது அரசு முத்திரையுடன் கூடிய காரில் 5 பேர் வந்தனர். வாக்கி டாக்கியுடன் தனிப்படை போலீசார் எனக்கூறி தங்கத்திடம் செம்பு உள்ளிட்ட திருட்டு பொருட்களை வாங்கி இருப்பதாக கூறி விசாரணைக்கு அழைத்தனர். மறுத்த அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தினர். வழக்கு பதியாமல் இருக்க ரூ.20 லட்சம் தரும்படி கேட்டனர். தங்கம் தவறு செய்யவில்லை என கூறினார். ஆனால் ரூ.5 லட்சம் தந்தால் விடுவிப்பதாக தெரிவித்தனர். தங்கம் மகன் செந்திலிடம் ரூ.5 லட்சம் கொண்டு வரும்படி கூறினார்.இரவு 7:30 மணியளவில் விருதுநகர் 4 வழிச்சாலையில் நின்ற கும்பலிடம் ரூ.5 லட்சத்தை கொடுத்து தங்கத்தை செந்தில் மீட்டார். உடன் கோவில்பட்டி கிழக்கு போலீசில் புகார் செய்தார். எஸ்.பி., பாலாஜி சரவணன் உத்தரவின்படி டி.எஸ்.பி., வெங்கடேஷ் தலைமையில் தனிப்படையினர் கும்பலை தேடினர்.

கடத்தல் கும்பல் காரில் சென்னை பதிவு எண் இருந்தது. ஆனால் சுங்கச்சாவடிகளில் அந்த எண் பதிவாகவில்லை. அந்த கார் கடந்தபோது கர்நாடக மாநில பதிவெண்ணில் சுங்கச்சாவடி கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டது தெரிந்தது. அரவக்குறிச்சி வேளஞ்செட்டியூர் சுங்கச்சாவடியில் தெரிவித்தனர். போலீசார் பின் தொடர்வதை அறிந்த கடத்தல் கும்பல் போலீசார் ஏற்படுத்திய தடுப்புகளில் மோதி நிற்காமல் சென்றது.

இருப்பினும் நள்ளிரவில் போலீசார் ஆட்டையாம்பட்டியில் தடுப்புகளை ஏற்படுத்தி காரை போலீசார் மடக்கினர். காரில் இருந்த பெங்களூரு தாஸ் 30, பரன் கவுடா 29, டேனியல் 48, பவுல் 33, எப்ரோஸ் 48, ஆகியோரை கைது செய்தனர். ரூ. 5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மூளையாக செயல்பட்ட சாத்தூரை சேர்ந்தவர் மதுரையில் இறங்கியது தெரிந்தது. பகலில் நடந்த கடத்தலில் இரவுடன் இரவாக கும்பலை கைது செய்த தனிப்படையினரை எஸ்.பி., பாலாஜி சரவணன் பாராட்டினார்.


காதலிக்க மறுத்த பெண் கொலை: காதலன் கைதுதிருப்பத்துார்-இளம்பெண்ணை பலாத்காரம் செய்து, கொன்று கிணற்றில் வீசிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அடுத்த செல்ரப்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ்பிரியா, 22; பட்டதாரி பெண்; பெற்றோர் இறந்ததால், தாத்தா பராமரிப்பில் வளர்ந்தார். கடந்த மாதம், 22ல் மாயமான நிலையில், மறுநாள் அப்பகுதி கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கந்திலி போலீசார் விசாரித்தனர். உடற்கூறு ஆய்வில், கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது தெரிந்தது.அவர் பயன்படுத்திய மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' ஆன நிலையில், நான்கு நாட்களுக்கு முன், வேறு யாரோ பயன்படுத்தியது தெரிந்தது. விசாரணையில், சந்தோஷ்பிரியா பக்கத்து வீட்டைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மகேந்திரன், 21, போனை பயன்படுத்தியது தெரிந்தது. சந்தோஷ்பிரியாவை காதலிக்க வற்புறுத்தியதில், அவர் மறுத்து வேறு ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால் சரமாரியாக தாக்கி, வயல்வெளிக்கு துாக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின், கழுத்தை நெரித்துக் கொன்று, கிணற்றில் உடலை வீசியது தெரியவந்தது. கந்திலி போலீசார், மகேந்திரனை கைது செய்தனர்.


2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலைlatest tamil newsகரூர்-கரூரில், இரண்டு குழந்தைகளை கொன்று, தாய் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கரூர், கந்த பொடிக்கார தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 60; த.மா.கா., பிரமுகர். இவரது மகன் வெங்கடேஷன், 35; தனியார் நிறுவன ஊழியர்.இவரின் மனைவி நிஷாந்தி, 30; இவர்களின் மகள் தியாழினி, 4; மகன் பூபன் பார்க்கவ், 3; ஜெகநாதன், வெங்கடேஷன், ஈரோடு மாவட்டம், அரச்சலுார் அனுமன்பள்ளியில் உள்ள, கோவிலுக்கு நேற்று சென்றனர்.

இரவாகியும் வெங்கடேஷன் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டுக்கு சென்று பார்த்த போது, இரு குழந்தைகளுடன், நிஷாந்தி துாக்கில் சடலமாக தொங்கினார்.கரூர் டவுன் போலீசார் விசாரித்தனர். நிஷாந்திக்கு பல மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்ததால், இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.


விபத்தில் சிக்கிய காரில் ரூ 5 லட்சம் குட்கா மீட்புசேலம்,-சேலத்தில் மேம்பால தடுப்பு சுவரில் மோதிய காரில் வந்தவர்கள் மாயமான நிலையில், போலீசார் சோதனை செய்ததில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கர்நாடகா மாநிலம், மைசூரைச் சேர்ந்த, உஜ்வால் சிங் என்பவருக்கு சொந்தமான, 'ஹோண்டா சிட்டி' கார், நேற்று காலை, 4:15 மணிக்கு, சேலம், சீலநாயக்கன்பட்டி மேம்பால தடுப்புச்சுவரில் மோதி, முன் சென்ற வாகனம் மீது மோதி நின்றது. காரை ஓட்டி வந்தவர்கள் மாயமாகினர்.மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல்படி, போலீசார் சென்று காரை சோதனை செய்தனர். காரில், 46 'பார்சல்'களில், 500 கிலோ குட்கா, பான்பராக் போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.இதன் மதிப்பு, 5 லட்சம் ரூபாய். காரை அன்னதானப்பட்டி ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர்.கார் உரிமையாளர் தெரிய வந்துள்ள நிலையில், குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தியது யார், விபத்தில் சிக்கியவர்கள், எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


வீடு புகுந்து மூதாட்டியிடம் 25 பவுன் நகை லவட்டிய பெண்கலசப்பாக்கம்-வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம், 25 சவரன் நகையை திருடிய பெண்ணை, போலீசார் தேடுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த காஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்ப ராணி, 75. சில ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்து விட்டார். மூன்று மகன்கள் சென்னையில் வசிக்கின்றனர். காஞ்சி கிராமத்தில், மூதாட்டி தனியாக வசிக்கிறார். நேற்று முன்தினம் மாலை காரில், ஒரு பெண், புஷ்பராணி வீட்டுக்கு வந்தார்.

கணவர் கண்ணனுடன் பணிபுரிந்த ஆசிரியை என அறிமுகப்படுத்தி, அவரிடம் நலம் விசாரித்துள்ளார்.பின், அந்த பெண் கிளம்புவதாக கூறியுள்ளார். அவருக்கு பீரோவை திறந்து, புஷ்பராணி, ஜாக்கெட் துணி மற்றும் குங்குமம், மஞ்சள் கொடுத்துள்ளார்.அதை பெற்றுக்கொண்ட பெண், கழிப்பறைக்கு செல்வதாக கூறி, வீட்டின் உள்ளே சென்று, மூதாட்டி திறந்து வைத்திருந்த பீரோவில் இருந்து, 25 சவரன் நகையை திருடி, நைசாக காரில் ஏறி தப்பினார்.

அந்த பெண் சென்ற பின், வீட்டின் உள்ளே சென்ற புஷ்பராணி, பீரோவில் இருந்த துணிகள் கலைந்து கிடப்பதையும், 25 சவரன் நகை காணாமல் போனதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.அவர் அளித்த புகார்படி, கடலாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X