உபரி நீருடன் 18 துணை ஆற்று நீர் கலப்பு; பெரியாறு அணை நீர் என மிரட்டும் கேரளா| Dinamalar

உபரி நீருடன் 18 துணை ஆற்று நீர் கலப்பு; பெரியாறு அணை நீர் என மிரட்டும் கேரளா

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (6) | |
கூடலுார் : பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு வெளியேற்றப்படும் தண்ணீரால் மிகப்பெரிய பாதிப்பு போன்ற மாயையை ஏற்படுத்தி, கேரள மக்களை அம்மாநில அரசியல்வாதிகள் அச்சுறுத்துவதாக, தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணை வரை, 1 லட்சம் கன அடி நீர் வெளியேறும் வகையில் பெரியாறு இருந்தது. காலப்போக்கில் பெரியாறு கரை ஓரங்களில் ஆக்கிரமிப்பு
பெரியாறு அணை, கேரளா, தமிழக விவசாயிகள்,Periyar Dam, Kerala, Tamil Nadu farmers,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


கூடலுார் : பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு வெளியேற்றப்படும் தண்ணீரால் மிகப்பெரிய பாதிப்பு போன்ற மாயையை ஏற்படுத்தி, கேரள மக்களை அம்மாநில அரசியல்வாதிகள் அச்சுறுத்துவதாக, தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.



பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணை வரை, 1 லட்சம் கன அடி நீர் வெளியேறும் வகையில் பெரியாறு இருந்தது. காலப்போக்கில் பெரியாறு கரை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், ஹோட்டல்கள் முளைத்தன.


latest tamil news



இதனால், வினாடிக்கு, 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேறும் போது, ஆக்கிரமிப்பு வீடுகளை ஒட்டி செல்லும் நிலை உருவாகியுள்ளது.கடந்த, 2018ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பெரியாறு அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் மட்டுமல்லாது, அப்பகுதியில் பெய்த கன மழையாலும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இதில், ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகள் சேதமடைந்தன.



ஆக்கிரமிப்புகளை அனுமதித்து, ஓட்டுக்காக குரல் கொடுத்து வரும் கேரள அரசியல்வாதிகள், தற்போது பெரியாறு அணையில் வெளியேற்றப்படும், 2,000 கன அடி தண்ணீருக்கு, அப்பகுதி அழிந்து விடும் என்ற மாயையை ஏற்படுத்துகின்றனர்.




பொய் பிரசாரம்


பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:அணை மீது, கேரள மக்கள் மிகப்பெரிய அச்சம் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, 30க்கும் மேற்பட்ட இடங்களில் அவசர கால முகாம்களை கேரள அரசு அமைத்துள்ளது.அணை உபரி நீர் மட்டுமல்லாது, கேரள வனப்பகுதிகளில் இருந்து இணையும், 18 துணை ஆறுகளான தடியம்பாடு, கீரித்தோடு, பனங்குடி உட்பட 18 சிறு ஆறுகளின் தண்ணீரும் கலந்து, இடுக்கி அணைக்கு செல்கிறது.



ஆனால், பெரியாறு அணையில் இருந்து மட்டுமே தண்ணீர் வருவதாக, கேரள மக்களை நம்ப வைக்கின்றனர். இடுக்கி அணையில் இருந்து வெளியேறும் ஆற்றை, பெரியாறு என அழைத்து, கேரள மக்களிடம் அங்குள்ள அரசியல்வாதிகள் பொய் பிரசாரம் செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X