இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் உலக நாடுகளுக்கான 'மாடல்'

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி : ''இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம், நடைமுறை உலக நாடுகளுக்கான சிறந்த 'மாடலாக' விளங்குகிறது,'' என, நிடி ஆயோக் நடத்திய முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.மத்திய அரசுக்கு ஆலோசனைகள் வழங்கும் நிடி ஆயோக் அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம் புதுடில்லியில் நேற்று நடந்தது. இதில், 23 மாநிலங்களின் முதல்வர்கள், மூன்று துணை நிலை
பிரதமர் மோடி, நிடி ஆயோக், மாநாடு, இந்திய மாடல்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



புதுடில்லி : ''இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம், நடைமுறை உலக நாடுகளுக்கான சிறந்த 'மாடலாக' விளங்குகிறது,'' என, நிடி ஆயோக் நடத்திய முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.மத்திய அரசுக்கு ஆலோசனைகள் வழங்கும் நிடி ஆயோக் அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம் புதுடில்லியில் நேற்று நடந்தது.

இதில், 23 மாநிலங்களின் முதல்வர்கள், மூன்று துணை நிலை கவர்னர்கள், இரண்டு யூனியன் பிரதேச நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை.இந்த கூட்டத்தில் நான்கு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மாற்றுப் பயிர்கள் மற்றும் பருப்பு, எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட வேளாண் உற்பத்தியில் சுயசார்பு நிலையை எட்டுவது, புதிய பள்ளி தேசியக் கல்வி கொள்கையை அறிமுகம் செய்வது, உயர்கல்வியில் புதிய தேசியக் கல்வி கொள்கையை அறிமுகம் செய்வது, நகர்ப்புற நிர்வாகம் ஆகிய தலைப்புகளில் விவாதிக்கப்பட்டன.


latest tamil news


ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒருங்கிணைப்பாளராக இருந்து இந்த மாநாட்டை வழி நடத்தினார். இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:நாட்டில், 75 ஆண்டுகளில் முதல் முறையாக அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களும் மூன்று நாட்கள் இங்கு கலந்துரையாடி ஆலோசனை நடத்தினர். அவர்களுடைய கூட்டு கருத்துக்களின் அடிப்படையிலேயே முதல்வர்கள் இடையே ஆலோசனை நடந்தது. ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கூட்டு முயற்சியால் மட்டுமே வரி வசூல் மேலும் அதிகரிக்க முடியும்.கொரோனா வைரஸ் பரவலின்போது, அனைத்து மாநில அரசுகளும் மிகச் சிறப்பாக செயல்பட்டன.

கொரோனா பரவலைத் தடுப்பது, தடுப்பூசி வழங்குவதில் உலக நாடுகளுக்கு மிகச் சிறந்த உதாரணமாக நம் நாடு விளங்கியது. இதற்கான பாராட்டு அனைத்து மாநிலங்களையே சேரும்.நம் கூட்டாட்சி தத்துவம் மற்றும் நடைமுறையானது, உலக நாடுகளுக்கு சிறந்த மாடலாக விளங்குகிறது. எந்தக் கடினமான சவாலையும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் சாதனை படைக்கலாம் என்பதை நாம் நிரூபித்துள்ளோம்.'ஜி - 20' எனப்படும் 20 நாடுகள் அடங்கிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின், 2023ம் ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்க உள்ளது.இந்தியா என்றால், தலைநகர் புதுடில்லி என்றே உலக நாடுகள் பார்க்கின்றன.

ஆனால் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அடங்கியதே இந்தியா என்பதை உலக நாடுகளுக்கு காட்டுவோம். ஜி - 20 தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்காக ஒரு சிறப்புக் குழுவை அனைத்து மாநிலங்களும் அமைக்க வேண்டும்.நவீன தொழில்நுட்ப உதவிகளுடன் வேளாண் துறையில் நாம் சுயசார்பு நிலையை எட்ட வேண்டும். நகர்ப்புற வளர்ச்சியை ஒரு சவாலாக பார்க்கக் கூடாது. அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, தேவையான வசதிகளை, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


முதல்வர்கள் பேசியது என்ன?

இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பேசியதாவது:மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் : கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படக் கூடாது. மாநிலப் பட்டியலில் உள்ள விஷயங்கள் தொடர்பாக அரசியல் சாசனம் மற்றும் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளும்போது மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். பா.ஜ.,வைச் சேர்ந்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் : தேசியக் கல்விக் கொள்கையை, உயர்கல்வித் துறையில் அடுத்த ஆண்டு, 100 சதவீதம் அமல்படுத்துவோம்.காங்.,கைச் சேர்ந்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் : ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடு செய்யும் திட்டத்தை, மேலும் ஐந்து ஆண்டு நீட்டிக்க வேண்டும். சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் பொருட்களுக்கான, 'ராயல்டி' எனப்படும் உரிமத் தொகையை உயர்த்த வேண்டும்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
08-ஆக-202216:38:26 IST Report Abuse
Priyan Vadanad இதெற்கெல்லாம் ஒரு திறமை, ஒரு மச்சம் வேண்டும்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
08-ஆக-202213:46:29 IST Report Abuse
jayvee அப்படியென்றால், ஒன்றிய அரசு என்றுசொல்வதில் தவறு என்ன இருக்கிறது..
Rate this:
08-ஆக-202216:47:38 IST Report Abuse
ஆரூர் ரங்யுனைடெட் என்றால் ஒன்றியம். ஆனால் யூனியன் என்றால் பொருள் வேறு. பல உதிரி பாகங்கள் சேர்ந்தது ஒரு (UNITED ) கார். . உடல் என்பது பாகங்கள் சேர்ந்து உருவானதல்ல ..ஒன்றாகவே உருவாகி ஒன்றாகவே இருப்பது. UNION. பிரிக்கப்பட்ட முடியாதது.😛கொஞ்ச நாள் முரசொலி படிப்பதை நிறுத்தினால் இது நன்கு புரியும்....
Rate this:
08-ஆக-202216:47:30 IST Report Abuse
ஆரூர் ரங்யுனைடெட் என்றால் ஒன்றியம். ஆனால் யூனியன் என்றால் பொருள் வேறு. பல உதிரி பாகங்கள் சேர்ந்தது ஒரு (UNITED ) கார். . உடல் என்பது பாகங்கள் சேர்ந்து உருவானதல்ல ..ஒன்றாகவே உருவாகி ஒன்றாகவே இருப்பது. UNION. பிரிக்கப்பட்ட முடியாதது.😛கொஞ்ச நாள் முரசொலி படிப்பதை நிறுத்தினால் இது நன்கு புரியும்....
Rate this:
Cancel
08-ஆக-202209:36:43 IST Report Abuse
ஆரூர் ரங் இலவச தடுப்பூசி திட்டம் மத்திய அரசுடையது என்றாலும் அது ஒரு கூட்டு முயற்சியின் வெற்றி என அடக்கத்துடன் குறிப்பிட்டார் மோதி👌. ஆனால் எல்லா விதங்களிலும் கூட்டாட்சி என்பது அரசியல் சட்டத்திலும் இல்லை. நிர்வாக வசதிக்காக தற்காலிகமாகப் பிரிக்கப்பட்டு செயல்படுபவையே மாநிலங்கள். அவற்றுக்கு அதிக அதிகாரம் கொடுத்தால் குடும்பக் கட்சிகளிடம் சிக்கி நாடே சுக்குநூறாக ஆகி சிதறிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X