மதுரையில் இரவு நேர விமானங்கள் இயங்குவது எப்போது? மத்திய அமைச்சர் தகவல்

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
மதுரை : 'மதுரையில் இரவு விமானங்களை இயக்க விமான நிறுவனங்கள் முன்வந்தால் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக்கி நேரடியாக வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்க வேண்டும். ஏர்பஸ் போன்ற பெரிய விமானங்கள் மதுரையில் இறங்க ஏதுவாக ஓடுபாதையை 12 ஆயிரம்
ஜோதிராதித்யா சிந்தியா, மதுரை விமான நிலையம்,தமிழக அரசு,  Madurai Airport, Jyotiraditya Scindia, TNGovt,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : 'மதுரையில் இரவு விமானங்களை இயக்க விமான நிறுவனங்கள் முன்வந்தால் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக்கி நேரடியாக வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்க வேண்டும். ஏர்பஸ் போன்ற பெரிய விமானங்கள் மதுரையில் இறங்க ஏதுவாக ஓடுபாதையை 12 ஆயிரம் அடியாக நீட்டிக்க வேண்டும். இரவு நேரங்களிலும் விமானங்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு லகு உத்தியோக பாரதி தலைவர் அருணாச்சலம் தலைமையில் நிர்வாகிகள் மத்திய அமைச்சர் முரளிதரனிடம் மனு வழங்கினர்.

அருணாச்சலம் கூறியதாவது: மனுவை மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு முரளிதரன் பரிந்துரைத்தார். ஜோதிராதித்யா அனுப்பிய தபாலில், மதுரை விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமானங்களை இயக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை சர்வதேச கஸ்டம்ஸ், இமிக்ரேஷன் விமான நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருவழி விமான ஒப்பந்தம் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


latest tamil newsதமிழக அரசு விமான ஓடுபாதை விரிவாக்கத்திற்காக 633.17 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டு 528.65 ஏக்கரை கையகப்படுத்தி தேசிய விமான போக்குவரத்து ஆணையத்தில் ஒப்படைத்துள்ளது. மீதமுள்ள 107 ஏக்கரை தமிழக அரசு ஒப்படைத்த பின் ஓடுபாதை விரிவாக்க பணி நடக்கும். இரவு நேர விமானங்களை இயக்க கட்டமைப்புகள் உள்ளன. விமான நிறுவனங்கள் இரவு நேர விமானங்கள் இயக்க முன்வந்தால் அனுமதி வழங்கப்படும்,'' என குறிப்பிட்டுள்ளார், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
08-ஆக-202217:57:08 IST Report Abuse
Natarajan Ramanathan மதுரை விமான நிலையத்தில் இரவுநேர மின்வசதி இருக்கிறதா? அணில் ஏதும் வராதா?
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-ஆக-202211:00:40 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இரவில் தான். இதை சொல்ல முந்திரி வேணுமா என்ன ?
Rate this:
08-ஆக-202211:19:46 IST Report Abuse
Sakthi,sivagangai அடேய் பொய்ஹிந்து இதை மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சொல்லாமல் உன் அணில் அமைச்சரா சொல்ல முடியும். உபிஸ் எல்லாம் சமச்சீர்தான் என்பதை அடிக்கடி நினைவு படுத்துகிறார்கள்....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-ஆக-202210:00:43 IST Report Abuse
Bhaskaran அப்படியே பயணிகள் கூட்டம் ஏகமாக இருக்கோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X