எத்தனை அவதாரம் எடுத்தாலும் அ.தி.மு.க.,வை வீழ்த்த முடியாது: பழனிசாமி

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (43) | |
Advertisement
பழநி-''முதல்வர் ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அ.தி.மு.க.,வை வீழ்த்த முடியாது,'' என, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அ.தி.மு.க., சார்பில் நடந்த வரவேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசினார். அவர் மேலும் பேசியதாவது: ஸ்டாலின் குடும்பத்தினருக்காக ஆட்சி நடத்துகிறார். அ.தி.மு.க., ஜனநாயக கட்சி. இலங்கையின் இன்றைய நிலையை மனதில் வைத்து கொண்டு ஸ்டாலின் ஆட்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பழநி-''முதல்வர் ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அ.தி.மு.க.,வை வீழ்த்த முடியாது,'' என, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அ.தி.மு.க., சார்பில் நடந்த வரவேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசினார்.



latest tamil news



அவர் மேலும் பேசியதாவது: ஸ்டாலின் குடும்பத்தினருக்காக ஆட்சி நடத்துகிறார். அ.தி.மு.க., ஜனநாயக கட்சி. இலங்கையின் இன்றைய நிலையை மனதில் வைத்து கொண்டு ஸ்டாலின் ஆட்சி நடத்த வேண்டும். விலைவாசி உயர்வு குறித்து கவலைப்படாமல் ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்துகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஸ்டாலின் முதல்வராக உள்ளார்.

ஆட்சிக்கு வந்து 14 மாதங்களாகியும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு எந்த நல்ல திட்டமும் நிறைவேற்றவில்லை. அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்கள் பிரச்னைகளை குறித்து சிந்திக்கும் கட்சி அ.தி.மு.க., மக்கள் காவிரி வெள்ளத்தில் சிக்கிய போது அரசு சார்பில் யாரும் பார்க்கவில்லை.ஸ்டாலினுடன் இணைந்து அ.தி.மு.க.,விற்கும், தொண்டர்களுக்கும் துரோகம் செய்தவர்கள் கோயிலாக கருதும் அ.தி.மு.க., தலைமை அலுவலக கதவை காலால் உதைத்து உள்ளே சென்று அங்குள்ள பொருட்களை எடுத்து சென்றனர். திருட்டுத்தனமாக அவற்றை எடுத்த சென்றது யார் என தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை தமிழக அரசு.


latest tamil news



பலம் பொருந்திய அ.தி.மு.க., விற்கே இந்நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை மோசமாக உள்ளது. இந்த மக்கள் விரோத அரசு எப்போது முடியும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர் என்றார்.முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் மருதராஜ், ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி, நிர்வாகிகள் வேணுகோபால், பரமசிவம், ரவிமனோகரன், முருகானந்தம், அன்வர்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
08-ஆக-202221:24:26 IST Report Abuse
sankar பழனிச்சாமி எங்கிற அவதாரம் போதும் அதிமுகவை காலிபண்ண.
Rate this:
Cancel
TRUBOAT - Chennai,இந்தியா
08-ஆக-202217:43:18 IST Report Abuse
TRUBOAT வெளியில இருந்து யாரும் வர வேண்டாம்... ஒன்னு தானே அழிஞ்சுரும் இல்லாட்டி கூட்டணிக்கட்சிகளால மூடுவிழா நடத்தப்படும்.... த(ம)லை என்ன செய்யுறாருனு தெரியலையே...
Rate this:
Cancel
08-ஆக-202217:26:57 IST Report Abuse
அப்புசாமி எல்லாம் போனாலும் லெட்டர் பேட் லெவலுக்காவது நடக்கும். கவலையே வாணாம் சாமி. அதை யாரும் அக்ஷிக்க முயற்சிக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X