52 ஆண்டுகளுக்கு முன்பு திருடுப்போன பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாண்டந்தோட்டம் பகுதியில் நடனபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 52 ஆண்டுகளுக்கும் முன்பாக அதாவது கடந்த 1971ம் ஆண்டு மே மாதம் பார்வதி சிலை உள்பட 5 சிலைகள் திருடு போனது. இது குறித்து நாச்சியார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் சிலையை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாண்டந்தோட்டம் பகுதியில் நடனபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 52 ஆண்டுகளுக்கும் முன்பாக அதாவது கடந்த 1971ம் ஆண்டு மே மாதம் பார்வதி சிலை உள்பட 5 சிலைகள் திருடு போனது. இது குறித்து நாச்சியார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் சிலையை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு வாசு என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.latest tamil news


அதில் திருடப்பட்ட பார்வதி சிலை உள்ளிட்ட 5 சிலைகளும் சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து தீவிர விசாரணையில் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியங்கள் மற்றும் ஏல மையங்களில் உள்ள சோழர் கால பார்வதி சிலைகளை தேட தொடங்கினார். மேலும் புதுச்சேரியில் உள்ள இந்திய- பிரான்ஸ் கல்வி நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தாண்டந்தோட்டத்தில் உள்ள நடனபுரீஸ்வரர் கோவிலில் இருந்து திருடுபோன பார்வதி சிலையின் உருவம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல இல்லத்தில் உள்ள பார்வதி சிலையை ஒத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


latest tamil newsமேலும் மாநில தொல்லியல் துறையின் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய நிபுணரான ஸ்ரீதரனிடம் விசாரணை அதிகாரிகள் சிலை தொடர்பாக கருத்து கேட்டனர். அதிலும் பார்வதி சிலை நியூயார்க் ஏல இல்லத்தில் இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்கா நியூயார்க் ஏல இல்லத்தில் இருந்து பார்வதி சிலையை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவுக்கு மீட்டு வந்த உடன் தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் கோவிலுக்கு சிலை கொண்டு வரப்படும். மேலும் திருடுபோன மற்ற 4 சிலைகளையும் தேடும் பணி நடந்து வருகிறது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.கண்டுபிடிக்கப்பட்ட பார்வதி சிலையின் சிறப்பம்சங்கள்:


பார்வதி சிலை செப்பு கலவையால் ஆனது. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்தை சேர்ந்தது என்றும், 52 செ.மீ. உயரம் கொண்டது.


சிலையின் மதிப்பு:


இதன் மதிப்பு 16 கோடியே 8 லட்சத்து 26 ஆயிரத்து 143 என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
08-ஆக-202217:32:54 IST Report Abuse
DVRR வேடிக்கை என்னவென்றால் எப்ப்டோதும் எதிலும் நாம் காரியம் ஒன்றே பார்க்கின்றோம் அதற்கே மதிப்பு தருகின்றோம் ஆனால் அதன் காரணம் அறிந்து இந்த மாதிரி தவறுகள் நடக்காமல் இருக்க என்ன செய்வது என்பது பற்றி ஆராய மறுக்கின்றோம். இந்த சிலை திருட்டு போனது திரும்பி வந்து விட்டது வெரி குட் பான்டஸ்டிக். திருடியது யார்???யார் சொல்லி திருடப்பட்டது?? இதன் தலைவர் யார்???இதை கண்டு பிடித்து அவர்களை தவறு கண்டேன் சுட்டேன் சட்டம் உபயோகியுங்கள் இந்த மாதிரி ஒரு மோசமான செயல் பிறகு நடக்கவே நடக்காது.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
08-ஆக-202216:46:02 IST Report Abuse
சீனி இதைப்பார்த்து வெறும் சிலைகள் என கூப்பாடு போடும் பகுத்தறிவு என்று சொல்லிக்கொள்ளும் கேடுகெட்ட, வெறும் கூலிக்கு கூப்பாடு போடும் அறிவில்லாத மரமண்டைகளுக்கு ஓர் வேண்டுகோள். இது தான் நம் மண்ணின் ஜீவநாடி, நடனபுரீஸ்வரர் சிவனின் துணைவியர் தான் இந்த சிலை, அந்த சிலை வடித்த கலைஞனின் வேலைப்பாடுகளை பாருங்கள், அந்த சிலையில் நளினம், பாவம், பாவகம், அந்த கைகள் முதல், அந்த நிற்கும் அழகு முதல், அந்த ஆபரணங்கள் முதல், அந்த கண்களின் நோக்கம், முகபாவம் முதல் அனைத்துமே, ஒரு நடனத்தில், நாட்டியத்தின் அடிப்படை இலக்கணமாகும். இதை 50வருடமாக ஆட்டைய்ப்போட்டு பயனற்று, நாதியற்று, சிவனை பிரிந்த பார்வதி எங்கோ கிடந்துள்ளது பற்றி கேள்விப்பட்டு மனம் பதைக்கிறது. இது தான் இந்துக்களின் உயிர், இது தான் நம் கலாச்சாரத்தின் நாடி நரம்புகளாகும், இனியும் இது சிலை என சொல்லும் மாந்தரின் நாக்கை அறுத்தாலும் பரவாயில்லை என தோன்றுகிறது. கலை, காலாச்சார, ஆன்மிக, கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்களையும், இழிவுபடுத்துப்வர்களையும் தீவிரவாத சட்டம் மூலம் தண்டிக்க வகை செய்யவேண்டும், இல்லையெனில் முதலில் இந்த மண்ணின் கலாச்சாரத்தை அழிப்பார்கள், அப்புறம் இந்த நாடு தானாக அழிந்துவிடும். அதே போல் பிஜேபி ஆட்சிக்கு வந்ததும், அனைத்து புராதண கோவில்களில் இருந்து 3கிமீ வரை உள்ள அனைத்து அரசியல் பொம்மைகளையும் அகற்ற சட்டம் இயற்றவேண்டும். கனல் கண்ணன் ஏன் கனலாக பொங்கினார் என்பதை சமூகம் உணர்ந்துகொள்ளவேண்டும், இனியும் இது நடக்கக்கூடாது. பி.ஜேபி ஆட்சிக்கு வந்ததும், திருட்டு அதிகாரிகளையும், அவர்களை ஆட்டுவிக்கும் போலிகளையும் கூட்டுக்களவாளிகளையும் விரட்டிவிட்டு பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களை அறய நிலைத்துறை அமைச்சாராக ஆக்கினால் மட்டுமே மிச்ச மீதி உள்ள கோவில் சிலைகளை காக்க முடியும். இல்லையெனில் தமிழகம் அழிவதை யாரும் தடுக்கமுடியாது.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
08-ஆக-202215:34:21 IST Report Abuse
Lion Drsekar பாராட்டுக்கள் சிலை எந்த கோவிலில் காணாமல் போனது , எந்த ஆண்டு, அதன் இன்றைய விலை, ஆனால் யார் களவாடினார்கள் என்று மட்டும் தெரியாது. அமலாக்கப்பிறிவு சுதந்திரம் அடைந்தது முதல் கணக்குகளை நோண்டினால் எல்லாமே வெளிச்சத்துக்கு வரும், நடக்கப்போவது இல்லை, அடுத்தவேளை சோற்றுக்கு வழி இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யவந்தவர்கள் கைகளில் இன்று இந்திய பொருளாதாரம் ,இறைவனும் கைவிட்டுவிட்டான், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X