பங்குச்சந்தைகளில் ஊசலாட்டம் : எஸ்.பி.ஐ பங்கு 3 % சரிவு

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
மும்பை : சர்வதேச பங்குச்சந்தைகளின் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று ஊசலாட்டத்துடன் துவங்கியது. இன்றைய (ஆக.,8) வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 46 புள்ளிகள் உயர்ந்து, 58,434 புள்ளிகளுடன், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 14.90 புள்ளிகள் உயர்ந்து, 17412 புள்ளிகளில் வர்த்தமாகியது. பவர், ஆட்டோமொபைல் மற்றும் உலோகம்
Sensex, Nifty, Share market update,சென்செக்ஸ், நிஃப்டி, பங்குச்சந்தைகள் ஊசலாட்டம், எஸ்.பி.ஐ பங்கு சரிவு


மும்பை : சர்வதேச பங்குச்சந்தைகளின் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று ஊசலாட்டத்துடன் துவங்கியது.

இன்றைய (ஆக.,8) வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 46 புள்ளிகள் உயர்ந்து, 58,434 புள்ளிகளுடன், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 14.90 புள்ளிகள் உயர்ந்து, 17412 புள்ளிகளில் வர்த்தமாகியது. பவர், ஆட்டோமொபைல் மற்றும் உலோகம் சார்ந்த நிறுவன பங்குகள் உயர்வு கண்டன. பாரத் பெட்ரோலியம், எஸ்.பி.ஐ பங்குகள் சரிவை கண்டன.

தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல், நிஃப்டி 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.


ரூபாய் மதிப்பு சரிவு :latest tamil newsஇன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23
காசுகள் குறைந்து ரூ.79.46 ஆக உள்ளது. அமெரிக்க வேலை வாய்ப்புகள் பற்றிய தரவுகள்
அடிப்படையில் செப்டம்பரியில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், 75 அடிப்படை புள்ளி விகிதத்தை
உயர்த்த கூடுமென வர்த்தகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பால், ஆசிய சந்தைகள் சரிவுடன் துவங்கின.எஸ்.பி.ஐ பங்கு 3 % சரிவு :latest tamil newsபொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐயின் முதல் காலாண்டு முடிவுகள், முதலீட்டாளர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால், அதன் பங்கு விலை 3 சதவீதம் அளவுக்கு இறக்கம் கண்டன. ஒப்பனை பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நைகா பங்குகள் 3 சதவீதம் அளவுக்கு ஏற்றம் கண்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthikeyan - Trichy,இந்தியா
08-ஆக-202214:51:36 IST Report Abuse
Karthikeyan இனி அடுத்தது இந்த வங்கியையும் அம்பானிக்கோ அல்லது அதானிக்கோ விற்றுவிடுவார். பிஎஸ்என்எல் சரியாக செயல்படாத நிலைக்கு ஆளாக்கி தன்னோட கூட்டாளி கொள்ளையன் அம்பானியின் நிறுவனத்தை உயர்த்த செய்த தகிடுத்தனம் மக்களுக்கு தெரியாதா. நன்றாக லாபத்தில் இருந்த எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்று அந்த நிறுவனத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விட்டானுங்க ஒன்றிய கும்பல்...
Rate this:
Cancel
08-ஆக-202213:18:22 IST Report Abuse
ஆரூர் ரங் இந்த ஷாக்கெல்லாம் பாரத பங்குச்சந்தைக்கு ஜுஜுபி.😆 உலகத்திலேயே மிக செழிப்பாக வளரும் டாப் சந்தைகளில் இந்தியா உள்ளது. இன்று இப்போது முக்கால் சதவீதம் உயர்ந்துள்ளது. நீண்ட கால முதலீட்டாளர்கள் யாரும் நஷ்டமடைந்ததில்லை. மோதி ஆட்சிக்கு வந்த நேரத்தில் 21300 ஆக இருந்த BSE குறியீடு இப்போது 58850. அதாவது 176 சதவீதம்👌 லாபம். இதுதான் மோதியின் இந்தியா.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
08-ஆக-202216:49:19 IST Report Abuse
Visu Iyerமோதி ஆட்சிக்கு வந்த நேரத்தில் 21300 ஆக இருந்த BSE குறியீடு இப்போது 58850. அதாவது 176 சதவீதம்///நீங்க வேற.. இருபது வருடத்திற்கு முன்பு ஐந்து ஆயிரமாக இருந்த பங்கு சந்தை குறியீடு.. காங்கிரஸ் ஆட்சி பதவி விலகும் போது 21300 - நான்கு மடங்கு உயர்ந்து இந்தியா வளர்ச்சி கண்டது. இப்போ பாருங்க திறமை இல்லாத பாஜக ஆட்சியில் 1300 ஆக இருந்த BSE குறியீடு இப்போது 58850. மூன்று மடங்கு கூட வளர்ச்சி இல்லை.....
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
08-ஆக-202212:32:39 IST Report Abuse
Narayanan Muthu கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூபாய் பத்து லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி அரசின் சாதனையாக இருக்கும்போது வங்கிகளின் பங்குகள் சரியாத்தான் செய்யும். இது ஆரம்பம் தான் இன்னும் இருக்கு நிறைய
Rate this:
08-ஆக-202213:07:42 IST Report Abuse
ஆரூர் ரங்பொய்களை எழுதற கை கூசவே இல்லையா? எந்த நிறுவனத்துக்கும் ஒரு பைசா கூட கடன் தள்ளுபடி கொடுக்க வில்லை என ரிசர்வ் வஞ்சி கூறுவது காதில் விழவில்லையா? திராவிஷம் மூளையை😇 மழுங்கடித்து விட்டதா?...
Rate this:
08-ஆக-202213:24:31 IST Report Abuse
ஆரூர் ரங்டியர் உ.பி. காங்கிரசு திமுக ஆட்சி முடிந்த போது ஸ்டேட் வங்கிப் பங்கு விலை 177 ரூபாய். இப்போ 517 ரூபாயை😄 தாண்டிவிட்டது. பங்குச்சந்தை பற்றி எதுவுமே தெரியாமல் 200 க்கு இவ்வளவு🙃 கிறுக்கக்கூடாது...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
08-ஆக-202216:44:21 IST Report Abuse
Visu Iyerபத்து ரூபாய் ஸ்டேட் வங்கி பங்கு ..ஆனால் பாருங்க.. காங்கிரசு திமுக ஆட்சி முடிந்த போது ஸ்டேட் வங்கிப் பங்கு விலை 177 ரூபாய் சுமார் 11 மடங்கு உயர்ந்து விட்டது.. ஆனால் பாருங்க பாஜக ஆgiட்சி வந்தவுடன் அது மூன்று மடங்கு தான் உயர்ந்து உள்ளது.. இப்போ புரிகிறதா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X