இளைஞர்களுக்காக உழைக்கும் தலைவராக வெங்கையா; பிரதமர் மோடி பாராட்டு

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: ராஜ்யசபாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் வழியனுப்பு விழாவில், 'கடும் உழைப்பு, விடா முயற்சிகளுடன் சிறப்பாக செயல்பட்டதாக' பிரதமர் மோடி பாராட்டினார்.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆக.,10ல் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து நடைபெற்ற துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான மேற்குவங்க முன்னாள்
PMModi, Vice President, VenkaiahNaidu, NarendraModi, RS, Rajya Sabha, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, வழியனுப்பு விழா, ராஜ்யசபா

புதுடில்லி: ராஜ்யசபாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் வழியனுப்பு விழாவில், 'கடும் உழைப்பு, விடா முயற்சிகளுடன் சிறப்பாக செயல்பட்டதாக' பிரதமர் மோடி பாராட்டினார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆக.,10ல் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து நடைபெற்ற துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான மேற்குவங்க முன்னாள் கவர்னர் ஜக்தீப் தங்கர் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆக.,11ல் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் ராஜ்யசபா தலைவரான வெங்கையா நாயுடுவுக்கு வழியனுப்பு விழா ராஜ்யசபாவில் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி நிறைவில், அவருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். பார்லிமென்டின் ராஜ்யசபாவிற்கு இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். ராஜ்யசபாவின் பல வரலாற்று தருணங்கள் வெங்கையா நாயுடுவின் அழகான செயல்பாடுகளுடன் தொடர்புடையவை ஆகும். எப்போதும் இளைஞர்களுக்காக உழைக்கும் தலைவராக வெங்கையா நாயுடு திகழ்கிறார். தாங்கள் பலமுறை அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக கூறி வந்தீர்கள்; ஆனால், நீங்களே நினைத்தாலும் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற இயலாது.


latest tamil newsராஜ்யசபாவில் தங்களின் பங்களிப்பு தற்போது நிறைவுற்றாலும் தங்களின் பொதுவாழ்வு அனுபவங்கள் மூலம் நாடு பலன் பெறும் என்பதில் உறுதி. தனிப்பட்ட முறையில், வெவ்வேறு சந்தர்பங்களில் உங்களை நான் நெருக்கமாகப் பார்த்தது எனது அதிர்ஷ்டம். உங்களுடன் சிலசமயம் பணியாற்றும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. துணை ஜனாதிபதியாக நீங்கள் சிறப்பாக செயல்பட்டீர்கள்.. கடும் உழைப்பு, விடா முயற்சி மூலம் வெங்கையா நாயுடு அனைத்து பொறுப்புகளையும் சிறப்பாக கையாண்டார்.


latest tamil news


கட்சிக்காரராக உங்களது கருத்தியல் அர்ப்பணிப்பு, எம்.எல்.ஏ.,வாக உங்கள் பணி, எம்.பி.,யாக உங்கள் செயல்பாடு என எதுவாக இருந்தாலும் சரி, அனைத்திலும் நீங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதை பார்த்திருக்கிறேன். நீங்கள் எந்த ஒரு வேலையையும் சுமையாகக் கருதாமல் புதிய வாழ்க்கையை சுவாசித்தீர்கள். உங்களது ஒவ்வொரு வார்த்தைகளும் கேட்கப்பட்டது, விரும்பப்பட்டது, மதிக்கப்பட்டது, ஆனால் ஒருபோதும் எதிர்க்கப்படவில்லை. இவ்வாறு வெங்கையா நாயுடுவை பிரதமர் பாராட்டினார்.


மல்லிகார்ஜூன் கார்கே


காங்., கட்சியின் ராஜ்யசபா தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில்: எங்களின் கொள்கையில் நமக்குள் வேறுபாடுகள் இருந்துள்ளது. இதனால் உங்களுக்கு நாங்கள் சில மனக்கஷடத்தை கொடுத்திருக்கலாம். ஆனாலும் நீங்கள் அவையை சிறப்பாக கொண்டு செல்வதில் கவனமாக இருந்தவர். உங்களுக்கு நன்றி ! உங்களின் பணி என்றும் போற்றுதலுக்குரியது. 3 முறை எம்பி.,யாக இருந்து செம்மையனா பணிகள் ஆற்றிய போது உங்களுடன் இருந்துள்ளோம் என்ற பெருமையும் உண்டு. கர்நாடகா, ஐ தராபாத் தொடர்பான 371 ஜே நிறைவேற்ற துணையாக இருந்தமைக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
11-ஆக-202217:15:18 IST Report Abuse
sankar ஜனாதிபதி பதவியை உங்களை விட மிகவும் சீனியரான நாயுடுக்குத் தராமல் ஏமாற்றிவிட்டு இந்த சால்ஜாப்பு பேச்சா
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
09-ஆக-202214:52:28 IST Report Abuse
sankar நாயுடுவுக்கு ஜனாதிபதி பதவி தராமல் ஏமாற்றிவிட்டு இந்த பேச்சா.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
09-ஆக-202208:45:41 IST Report Abuse
J. G. Muthuraj எப்போது வெங்கையா நாயுடு அவர்கள் இளைஞர்களுக்காக உழைக்கும் தலைவராக இருந்தார்? துணை ஜனாதிபதி பதவியின் மூலமாகவா? எப்படி? ஒருவேளை, பிஜேபி தலைவர்களை இளைஞர்கள் என்று பிரதமர் கருதுகிறார் போலும். அவர்களுக்காக இவர் அயராது உழைத்தார் என எடுத்துக்கொள்ளலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X