2வது ஆண்டாக சம்பளம் வாங்காத முகேஷ் அம்பானி

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
'2வது ஆண்டாக முகேஷ் அம்பானி, சம்பளமாக எதையும் பெறவில்லை' என ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தின் தனது ஆண்டறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :-ஜூன் 2020ல், 2020-21 நிதியாண்டுக்கான தனது சம்பளத்தைத் துறக்க முகேஷ் அம்பானி முடிவு செய்தார். பின்னர் 2021-22ம் நிதியாண்டிலும் சம்பளமாக எதுவும் எடுக்கவில்லை.இந்த
Mukesh Ambani, முகேஷ் அம்பானி, Salary, Nil, சம்பளம், பூஜ்யம், பில்லியனர், Reliance Industries, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்


'2வது ஆண்டாக முகேஷ் அம்பானி, சம்பளமாக எதையும் பெறவில்லை' என ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தின் தனது ஆண்டறிக்கையை வெளியிட்டது. அதில்
கூறப்பட்டுள்ளதாவது :-

ஜூன் 2020ல், 2020-21 நிதியாண்டுக்கான தனது சம்பளத்தைத் துறக்க முகேஷ் அம்பானி முடிவு
செய்தார். பின்னர் 2021-22ம் நிதியாண்டிலும் சம்பளமாக எதுவும் எடுக்கவில்லை.இந்த இரண்டு
வருடங்களிலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சார்பாக எந்தவிதமான நிதி, சலுகைகள், ஓய்வூதிய பலன்கள் போன்றவற்றையும் அவர் பெறவில்லை.

2008-09 முதல் 2019-20 நிதியாண்டு வரை, முகேஷ் அம்பானி தனது சம்பளத்தை ரூ.15 கோடியாகக்
குறைத்து, நிர்வாக இழப்பீட்டை குறைக்கும் விதமாக தனிப்பட்ட உதாரணத்தை உருவாக்கினார்.
முகேஷ் அம்பானி 2008-09ல் இருந்து சம்பளம், சலுகைகள், இதர செலவுகள் மற்றும் கமிஷன்
ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ரூ. 15 கோடி பெற்றார். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.24 கோடிக்கு
மேல் நிறுவனத்துக்கு திருப்பிச் செலுத்தினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil newsஜூன் 2020ல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின்
தலைவரும் ,நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, இந்தியாவில் கோவிட் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சியைப் பாதித்த சூழலில், தனது சம்பளத்தை விட்டுகொடுக்க முடிவு செய்தார் என கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், அவரது உறவினர்களான நிஹில் மற்றும் ஹிடல் மேஸ்வானியின் ஊதியம்
மாறாமல் ரூ.24 கோடியாக உள்ளது. அதில் ரூ.17.28 கோடி கமிஷன் தொகையும் அடங்கும்.
மறுபுறம், நிர்வாக இயக்குநர்கள் பிஎம்எஸ் பிரசாத் மற்றும் பவன் குமார் கபில் ஆகியோரின்
ஊதியம் ஓரளவு குறைந்துள்ளது. பிரசாத் 2021-22ல் ரூ.11.89 கோடியும், 2020-21ல் ரூ.11.99 கோடியும்
பெற்றார்.

கபில் 2021-22ல் ரூ.4.22 கோடியும், 2020-21ல் ரூ 4.24 கோடியும் பெற்றார். அவர்களின்
கொடுப்பனவுகளில் 2020-21 நிதியாண்டிற்கான 'செயல்திறன்-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகளும் அடங்கும். இது 2021-22ல் செலுத்தப்பட்டது

முகேஷ் அம்பானியைத் தவிர, நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இயக்குநராக இருக்கும் அவரது மனைவி நீடா அம்பானி, அமர்வுக் கட்டணமாக ரூ.5 லட்சமும், அந்த ஆண்டுக்கான இழப்பீடாக ரூ. 2 கோடியும் பெற்றார். முந்தைய ஆண்டில், அவர் அமர்வுக் கட்டணமாக ரூ.8 லட்சமும், ரூ.1.65 கோடி கமிஷனும் பெற்றிருருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
09-ஆக-202214:07:31 IST Report Abuse
K.n. Dhasarathan ஆஹா, இத்தகய தியாகம் ரொம்ப பெரிசு இதற்கு எதாவது அவார்டு சொல்லிட போறாங்க. ஏங்க அவர் கம்பெனியில அவர் சம்பளம் வாங்குறதை எப்படி ஏத்துக்க முடியும்? எப்படியும் அந்த காசு அவர் பக்கட்டுக்குத்தான், ஏதாவது டொனேஷன் கொடுத்தார் என்றால்தான் ஏற்றுக்கொள்ள முடியும்.மற்றதெல்லாம் சும்மா.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
08-ஆக-202221:17:40 IST Report Abuse
Tamilan லச்சக்கணக்கான் கோடிகளை சுருட்டி வைத்திருக்கும் ஒரு மனிதர் இப்படி ஒரு வேடம், வித்தை காட்ட வேண்டியுள்ளது
Rate this:
Cancel
Yokiyan - Madurai,இந்தியா
08-ஆக-202219:21:30 IST Report Abuse
Yokiyan Divident வேண்டாம்னு சொல்லிட்டாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X