" பால், தயிர், ஜி.எஸ்.டி., பற்றி கேட்காதீங்க " - கவர்னரை சந்தித்த ரஜினி பேட்டி

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (90) | |
Advertisement
சென்னை: சென்னையில் கவர்னர் ரவியை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், இருவரும் அரசியல் குறித்து விவாதித்ததாக கூறியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் இரண்டு நாள் பயணமாக டில்லி சென்றிருந்தார். பின்னர் நேற்று (ஆக.,7) சென்னை திரும்பிய ரஜினிகாந்த் இன்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சந்தித்தார். சந்திப்பிற்கு செய்தியாளர்களிடம் ரஜினி கூறியதாவது:மரியாதை
Rajinikanth, Politics, Governor Ravi, ரஜினிகாந்த், ரஜினி, அரசியல், கவர்னர், ரவி, சந்திப்பு, விவாதம்

சென்னை: சென்னையில் கவர்னர் ரவியை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், இருவரும் அரசியல் குறித்து விவாதித்ததாக கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இரண்டு நாள் பயணமாக டில்லி சென்றிருந்தார். பின்னர் நேற்று (ஆக.,7) சென்னை திரும்பிய ரஜினிகாந்த் இன்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சந்தித்தார். சந்திப்பிற்கு செய்தியாளர்களிடம் ரஜினி கூறியதாவது:
மரியாதை நிமித்தமான சந்திப்பு. அவருடன் 25 முதல் 30 நிமிடம் வரை பேசினேன். காஷ்மீரில் பிறந்து வட இந்தியாவிலேயே இருந்தவர் கவர்னர். அவர் தமிழகத்தை மிகவும் நேசித்துள்ளார். முக்கியமாக தமிழ் மக்கள், அவர்களின் நேர்மை, கடின உழைப்பு ஆகியவை கவர்னருக்கு மிகவும் பிடித்துள்ளது.


latest tamil news




அரசியல்


குறிப்பாக தமிழகத்தில் இருக்கின்ற ஆன்மிக உணர்வு அவரை ரொம்பவே ஈர்த்துள்ளது. தமிழகத்தின் நல்லதுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன் என்றார். அரசியல் பற்றியும் கவர்னருடன் விவாதித்தேன், அது பற்றி இப்போது பகிர முடியாது. மீண்டும் அரசியல் வரும் திட்டமில்லை. ஜெயிலர் படப்பிடிப்பு 15ம் தேதி அல்லது 22ம் தேதி துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பார்லிமென்ட் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'அது பற்றியெல்லாம் உங்களிடம் பேச முடியாது. நன்றி' என்றார். அதேபோல், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி உயர்வு குறித்து கேட்டதற்கு,சற்று யோசித்து பதில் ஏதும் சொல்லாமல் பின்னர் 'கருத்து கூற விரும்பவில்லை' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
13-ஆக-202211:39:41 IST Report Abuse
Matt P முக்கியமாக தமிழ் மக்கள், அவர்களின் நேர்மை, கடின உழைப்பு ஆகியவை கவர்னருக்கு மிகவும் பிடித்துள்ளது...உதாரணத்துக்கு கருணாநிதி குடும்பம் நேர்மையாகவும் கடின உழைப்பாலும் முன்னேறி ஸ்டாலின் இன்றைக்கு முதலைவராயிருக்கிறார்ர் என்பதை ரஜினி குறிப்பாக சொல்லியிருக்கலாம்.
Rate this:
Cancel
Ayokkiya Ariyan - chennai,இந்தியா
13-ஆக-202209:57:33 IST Report Abuse
Ayokkiya Ariyan தமிழகத்துக்கு எதையும் செய்வேன் என்றவர் , தமிழகம் நன்றாக இருக்க அவர் தமிழகத்தை விட்டு வேறு ஏங்கவைத்தது சென்ட்ரல் அதுவே அவர் செய்யும் சிறந்த செயலாக இருக்கும்
Rate this:
Cancel
Tamilarasan Tamilan - Alain,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஆக-202212:23:22 IST Report Abuse
Tamilarasan Tamilan எப்படி கருத்துச் சொல்வார் அவராகவா சந்தித்தார்? மேலிடம் கேட்டுக் கொண்டார்கள் இவர் போய் வெறுமனே சந்தித்து வந்தார் அவ்வளவே ஆளுநரின் மதிப்பை உயர்த்த பாஜக செய்த தந்திரம் ரஜினியை சந்திக்கவைத்தது.
Rate this:
C.SRIRAM - CHENNAI,இந்தியா
12-ஆக-202209:58:00 IST Report Abuse
C.SRIRAMஇருந்து தான் போகட்டுமே. டுமீளாக அரசியல் வாதிகளின் தரம் சொல்லிக்கொள்ளும் படியாக இருக்கிறதா ?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X