செய்யாறு: செய்யாறு அருகே, காஸ் கசிவால் தீப்பிடித்து எரிந்து வேன் நாசமானது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த செய்யாற்றை வென்றான் கிராமத்தை சேர்ந்தவர் ராதா, 70. உடல் நலக்குறைவு ஏற்பட்ட இவரை பார்க்க, சென்னை தண்டையார்பேட்டையில் வசிக்கும் மகள் ஆரவள்ளி, கணவருடன் 'மாருதி ஆம்னி' வேனில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு சொந்த ஊருக்கு வந்தார்.
செய்யாறு பஸ் ஸ்டாண்ட் அருகே, லேசான காஸ் கசிவு ஏற்பட்டது தெரிந்து, வேனை நிறுத்தி இருவரும் இறங்கினர்.சிறிது நேரத்தில் வேன் தீப்பற்றி எரிய தொடங்கியது. மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் வேன் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செய்யாறு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும், வேன் முற்றிலும் எரிந்து விட்டது.