கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு ஒரு மாதத்தில் ரூ.600 கோடி இழப்பு| Dinamalar

கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு ஒரு மாதத்தில் ரூ.600 கோடி இழப்பு

Added : ஆக 08, 2022 | |
நாமக்கல்: கறிக்கோழி உற்பத்தி செலவை காட்டிலும் குறைத்து கொள்முதல் விலை நிர்ணயம் செய்வதால், பண்ணையாளர்களுக்கு ஒரு மாதத்தில், 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா

நாமக்கல்: கறிக்கோழி உற்பத்தி செலவை காட்டிலும் குறைத்து கொள்முதல் விலை நிர்ணயம் செய்வதால், பண்ணையாளர்களுக்கு ஒரு மாதத்தில், 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.



தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு தினமும் நிர்ணயம் செய்கிறது.



ஆக., 1ம் தேதி, கொள்முதல் விலை கிலோ, 76 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. கடந்த, 4ம் தேதி, 10 ரூபாய் சரிந்து, கிலோ, 66 ரூபாயாக இருந்தது. ஒரு மாதமாக கொள்முதல் விலை தொடர்ந்து குறைந்து வருவது, பண்ணையாளர்களை கவலையடைய செய்துள்ளது.தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர் சம்மேளன துணை தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:கறிக்கோழி ஒரு கிலோ உற்பத்தி செய்ழ, 105 ரூபாய் செலவாகிறது. அதற்கு மேல், கொள்முதல் விலை நிர்ணயித்தால் மட்டுமே, பண்ணையாளர்களுக்கு லாபம் கிடைக்கும்.ஆனால், கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.



'நெக்' நிர்ணயிக்கும் விலையை விட குறைவாகவே வியாபாரிகள் கோழி வாங்குகின்றனர்.நெக் விலையில் இருந்து, 15 ரூபாய் குறைத்து கொள்முதல் செய்ததால், நெக் 10 ரூபாய் குறைத்துள்ளது. இருந்தும், பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.வாரம், 2.10 கோடி கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்த நிலையில், தற்போது, 2.50 கோடி கிலோ உற்பத்தி செய்யப்படுகிறது. தொடர் மழையால் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்ப முடியவில்லை.



உற்பத்தி செலவைவிட, கொள்முதல் விலை குறைத்து நிர்ணயம் செய்வதால், பண்ணையாளர்களுக்கு ஒரு மாதத்தில், 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு முடிந்துள்ளதாலும், வட மாநிலங்களில், ஸ்ராவன் விரதம் முடியும் நிலையில் உள்ளதாலும், கறிக்கோழி கொள்முதல் விலை, 90 ரூபாய் வரை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X