காமன்வெல்த்: பாட்மின்டனில் 3, டேபிள் டென்னிஸில் ஒரு தங்கம் வென்று இந்தியா அசத்தல்

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
பர்மிங்காம்: காமன்வெல்த்தில் பாட்மின்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் தங்கம் வென்றார். ஆடவர் இரட்டையர் பாட்மின்டனிலும், டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீரர்கள் தங்கம் வென்றனர்.இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.
PVSindhu, CWG22, CommonwealthGames2022, Badminton, Gold, பிவி சிந்து, காமன்வெல்த், பாட்மின்டன், தங்கம்

பர்மிங்காம்: காமன்வெல்த்தில் பாட்மின்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் தங்கம் வென்றார். ஆடவர் இரட்டையர் பாட்மின்டனிலும், டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீரர்கள் தங்கம் வென்றனர்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. இன்றுடன் (ஆக.,8) முடிவடைய உள்ள இந்த விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் பதக்கத்துடன் 5வது இடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், பாட்மின்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் பி.வி.சிந்து பதக்கத்தை உறுதி செய்தார்.latest tamil news
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கனடாவின் மிச்செல் லீ.,யை எதிர்கொண்டார். இதில் துவக்கம் முதல் அசத்தி வந்த பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றிப்பெற்று காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். மிச்செல் லீ கடந்த 2014ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர் ஆவார். பி.வி.சிந்து கடந்த 2018 காமன்வெல்த்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.லக்ஷயா சென்


ஆடவர் பிரிவு பாட்மின்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், மலேசியாவின் சீ யாங்கை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 19-21, 21-9, 21-16 என்ற செட் கணக்கில் மலேசிய வீரரை வீழ்த்திய லக்ஷயா சென் தங்கம் வென்றார்.இரட்டையர் பிரிவு


ஆடவர் இரட்டையர் பிரிவு பாட்மின்டன் போட்டியில் இந்திய வீரர்களான சிராஜ் ஷெட்டி, சாய்ராஜ் சாத்விக் ஜோடி இங்கிலாந்தின் பென், ஷான் இணையை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 21-15, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றிப்பெற்று தங்கப்பதக்கத்தை வென்றது.டேபிள் டென்னிஸ்


டேபிள் டென்னிஸ், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல் இங்கிலாந்தின் லியாம் பிட்ச்போர்டை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். மற்றொரு இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சத்யன் ஞானசேகரன், இங்கிலாந்து வீரரை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றார்.


இதனால் இந்தியா வென்ற தங்கப்பதக்கத்தின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஆக-202222:07:27 IST Report Abuse
kulandai kannan இந்தியாவிலேயே மிகப் பிரபலமான பெண் சிந்துவுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
08-ஆக-202216:16:11 IST Report Abuse
sankaranarayanan தழகத்தில்தான் விமான நிலையத்தில் இந்தியாவிலே அதிகமான தங்கக்கட்டிகள் கிடைத்துள்ளனவே அதுவே போதாதா?
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
08-ஆக-202215:40:09 IST Report Abuse
J. G. Muthuraj பொதுவாக என் மனசு தங்கம்....ஒரு போட்டின்னு வந்துவிட்டா சிங்கம்.....GREAT PERFORMANCE....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X