ரியல் எஸ்டேட் : சீன நெருக்கடியில் இருந்து இந்தியா கற்க வேண்டியது என்ன..?| Dinamalar

ரியல் எஸ்டேட் : சீன நெருக்கடியில் இருந்து இந்தியா கற்க வேண்டியது என்ன..?

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (8) | |
சீனா தனது வரலாற்றில் இல்லாத வகையில், மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஓராண்டாக சீனாவின் ரியல் எஸ்டேட் சந்தை வீழ்ச்சியடைந்து வருவது ,உலகத்திற்கு புதிய எச்சரிக்கை மணி அடித்துள்ளது. எவர்கிராண்டே குழுமத்துடன் தொடங்கிய பிரச்சனை இப்போது உலகம் முழுவதும் ஒரு நெருக்கடியாக மாறியுள்ளது. சீனாவில் வீடு சார்ந்த சந்தை, விண்ணளவில் விலை உயர்ந்து,
India,இந்தியா, China, சீனா, ரியல் எஸ்டேட், Real estate, Market, நகரமயமாதல், நிறுவனங்கள், கொள்கை, Lessonசீனா தனது வரலாற்றில் இல்லாத வகையில், மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஓராண்டாக சீனாவின் ரியல் எஸ்டேட் சந்தை வீழ்ச்சியடைந்து வருவது ,உலகத்திற்கு புதிய எச்சரிக்கை மணி அடித்துள்ளது. எவர்கிராண்டே குழுமத்துடன் தொடங்கிய பிரச்சனை இப்போது உலகம் முழுவதும் ஒரு நெருக்கடியாக மாறியுள்ளது. சீனாவில் வீடு சார்ந்த சந்தை, விண்ணளவில் விலை உயர்ந்து, இப்போது 'தேசிய அச்சுறுத்தலாக' மாறியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.இந்திய பிளம்பர் கூட்டமைப்பின் தலைவர் குர்மித் சிங் அரோரா கூறுகையில்,


”சீன முதலீட்டாளர்கள் , தற்போது இந்தியா உள்ளிட்ட மற்ற வளரும் சந்தையை குறிவைத்துள்ளனர். இது இந்திய சொத்துச் சந்தைகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்கும். இந்தியாவின் விரைவான நகரமயமாக்கல், 4,700 பட்டியலிடப்பட்ட அம்ருத் 2.0 நகரங்கள், மேக் இன் இந்தியா திட்டம், மிகப்பெரிய மெட்ரோ ரயில் செயல்படுத்தல், பெரு நகரங்களை இணைக்கும் பாலங்கள் , கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்துவது ஆகியவை அனைத்தும் நகரமயமாக்கல் மற்றும் நுகர்வோரின் செலவை அதிகரிக்கும்.

இது வீடு மற்றும் வணிகச் சொத்துக்கான தேவையை அதிகரிக்கிறது. அதிக வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை சீன ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இருந்து இந்திய நிறுவனங்களுக்கு மாற்றி வருகின்றனர். தற்போது அங்கு மூன்று
மடங்கு அதிக வருமானத்தை திரும்ப பெற்று வருகின்றனர்.”

இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


கடந்த ஆண்டில் சீனாவில் சொத்து விற்பனை 72 சதவீதம் குறைந்துள்ளது. இது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 30 சதவீதத்தை கொண்டுள்ளது.


ஆர்.பி.எஸ் குழுமத்தின் பங்குதாரர் சுரேன் கோயல் கூறுகையில், 'சீன நெருக்கடியில் இருந்து
இந்தியா கற்றுகொள்ள வேண்டிய பாடங்கள் என்னவென்றால், முதலீடுகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வருவது மக்களுக்கும், பொருளாதாரத்திற்கும் அதிக செலவை ஏற்படுத்தும். இரண்டாவது, ஒரு நிறுவனத்தின் கடன் துவக்கத்தில் விரைவான வளர்ச்சியைக் காட்டலாம். ஆனால் இன்றைய நிலையற்ற, நிச்சயமற்ற மற்றும் குழப்பமான சந்தை நிலைமைகளில், இது அனைத்தும் ஒரே நேரத்தில் வீழ்ச்சியடையும் அபாயம் இருக்கிறது.' என்றார்.

சீனாவில் வீடுகளின் விற்பனை கடந்தாண்டு ஒப்பிடுகையில் 60 சதவீதம் குறைந்துள்ளது, மேலும் தொடர்ந்து சரிந்து வருவது சீனாவின் வரலாற்றில் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது.


latest tamil newsபெர்க்ஷயர் ஹாத்வே ஹோம் சர்வீசஸ் வர்த்தக பிரிவு தலைவர் அஜய் ரகேஜா கூறுகையில், ”உலகளாவிய வளர்ச்சி வாய்ப்புகளில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது
இந்தியா போன்ற சந்தைகளில் புதிய மீட்சியைக் குறைக்கலாம்.சீனாவின் இரட்டை நெருக்கடிகள் , அந்நாட்டின் ரியல் எஸ்டேட் சந்தையில் நீண்டகால மந்தநிலையை ஏற்படுத்தினால், இந்தியாவில் இருந்து சீனாவிற்கு இரும்புத்தாது ஏற்றுமதி செய்வது பாதிக்கப்படலாம்.”

இவ்வாறு அவர்கள் கூறினார்.

சீன நெருக்கடியிலிருந்து நாம் கற்றுகொள்ள வேண்டியது என்னவென்றால், இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், தங்கள் நிதி சார்ந்த அபாயங்களை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்து, தற்போதைய பொருளாதார அமைப்பில் அதை மேலும் வலுவாக மாற்றும் வகையில், தங்களது வணிக கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X