”இந்தாண்டுக்குள் ரெபோ 6 சதவீதமாக உயரலாம்” : நிபுணர்கள் கருத்து

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
ரிசர்வ் வங்கி இந்தாண்டு இறுதிக்குள் ரெபோ விகிதத்தை 6 சதவீதமாக உயர்த்த கூடும். ஒரேயடியாக இல்லாமல் படிப்படியாக உயர்த்துமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளியன்று, ரெபோ விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தியது. நடப்பு நிதியாண்டில் மூன்றாவது முறையாக ரெபோ விகிதத்தை அதிகரித்துள்ளது. தற்போது வரை 1.4
ரிசர்வ் வங்கி, ரெபோ, நிபுணர்கள், வட்டி



ரிசர்வ் வங்கி இந்தாண்டு இறுதிக்குள் ரெபோ விகிதத்தை 6 சதவீதமாக உயர்த்த கூடும். ஒரேயடியாக இல்லாமல் படிப்படியாக உயர்த்துமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்தியாவின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளியன்று, ரெபோ விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தியது. நடப்பு நிதியாண்டில் மூன்றாவது முறையாக ரெபோ விகிதத்தை அதிகரித்துள்ளது. தற்போது வரை 1.4 சதவீதம் உயர்த்தியுள்ளது. தற்போது ரெபோ விகிதம் 5.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மற்றும் டிசம்பரில் நடைபெறும் பணக்கொள்கை குழு கூட்டத்தில் மேலும் ரெபோ விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது.

நோமுரா பொருளாதார நிபுணர் சோனல் வர்மா கூறுகையில் " எங்கள் பார்வையில் ரெபோ 6 சதவீதமாக உயரக்கூடும். செப்டம்பரில் நடக்கும் அடுத்த கூட்டத்தில் 35 அடிப்படை புள்ளிகள் உயர்வையும், டிசம்பரில் 25 அடிப்படை புள்ளிகள் உயர்வையும் எதிர்பார்க்கிறோம்.

கோடக் மகிந்திரா வங்கி கூறுகையில், ரெபோ விகிதம் 5.75 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும், இந்திய ரூபாய் ஸ்திரத்தன்மை மற்றும் உயர்ந்த பணவீக்கத்திற்குஎதிரான நடவடிக்கையாக ரிசர்வ் வங்கியின் ரெபோ விகித உயர்வைத் தொடரும் என்று எதிர்பார்க்கிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை 6.9 சதவீதம் குறைந்து, ஜூலையில் உச்சபட்சமாக 80 என்ற அளவுக்கு சரிந்தது. ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான சில்லறை பணவீக்கத்தை 6.7 சதவீதமாக வைத்துள்ளது.


latest tamil news



நாட்டின் சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் எட்டு ஆண்டுகளில் இல்லாத 7.79 % ஆக இருந்து ஜூன் மாதத்தில் 7.01% ஆக குறைந்தாலும், ரிசர்வ் வங்கியின் வரம்பான 6 சதவீதத்திற்கு மேல் இருந்து வருகிறது. ஜூலை மாதத்திற்கான பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் வரும் வெள்ளிக்கிழமை வரவுள்ளது.

யெஸ் பேங்க், அடுத்த இரண்டு கூட்டங்களில் தலா 25 அடிப்படை புள்ளிகள் மூலம் விகித உயர்வை எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளது. ஏனெனில் உலகளாவிய வளர்ச்சி குறைவதால் பணக்கொள்கை இறுக்கம், படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R MANIVANNAN - chennai,இந்தியா
09-ஆக-202214:05:53 IST Report Abuse
R MANIVANNAN இருக்கவே இருக்கிறார்கள் நடுத்தர மக்கள் அவர்கள் தலையில் மிளகாய் அரைக்கலாம்
Rate this:
Cancel
Gopinathan S - chennai,இந்தியா
09-ஆக-202210:21:16 IST Report Abuse
Gopinathan S ஹரே பையா..அந்த ஊறுகாய் பாட்டிலை கொஞ்சம் எடுப்பா....
Rate this:
Cancel
09-ஆக-202206:50:56 IST Report Abuse
கோபி மக்களின் வயிறு எரிச்சலை மீண்டும் எப்படி அதிகப்படுத்தலாம் என்ற யோசனையை ரிசர்வ் வங்கிக்கு தரும் கூட்டம் இந்த நிபுணர்கள் குழு... வாழ்க அவர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X