இலங்கையை போல் மக்கள் புரட்சி தமிழகத்திலும் வெடிக்கும்: பழனிசாமி

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
திருப்பூர்: இலங்கையில் குடும்ப ஆட்சியால் நாட்டை விட்டு அதிபர் தப்பி ஓடிய நிலை, தமிழகத்தில் திமுக.,விற்கு வரும் எனவும், இங்கும் அதுபோல் மக்கள் புரட்சி வெடிக்கும் எனவும் அதிமுக இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் காங்கேயத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் அதிமுக இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது: திமுக.,விற்கு தலைவர்
ADMK, Palanisamy, EPS, அதிமுக, பழனிசாமி, இபிஎஸ், இலங்கை, மக்கள் புரட்சி, திமுக, குடும்ப ஆட்சி

திருப்பூர்: இலங்கையில் குடும்ப ஆட்சியால் நாட்டை விட்டு அதிபர் தப்பி ஓடிய நிலை, தமிழகத்தில் திமுக.,விற்கு வரும் எனவும், இங்கும் அதுபோல் மக்கள் புரட்சி வெடிக்கும் எனவும் அதிமுக இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் காங்கேயத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் அதிமுக இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது: திமுக.,விற்கு தலைவர் ஒருவர் தான். ஆனால் அதிமுக.,விற்கு தொண்டர்கள் அனைவரும் தலைவர்கள் தான். கருணாநிதியால் கூட அதிமுக.,வை அழிக்க முடியவில்லை. எம்ஜிஆர் இறந்த பிறகு ஜெயலலிதா அதிமுக.,வை பல மடங்கு உயர்த்தி இந்தியாவின் 3-வது பெரிய கட்சியாக மாற்றி காட்டினார்.


latest tamil news


இலங்கையில் நடைபெற்ற குடும்ப ஆட்சியால், அதிபராக இருக்கும் போதே இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலை, தமிழகத்தில் திமுக.,விற்கு வரும். மக்கள் புரட்சி தமிழகத்திலும் வெடிக்கும். காற்றை எவ்வாறு தடுத்து நிறுத்த முடியாதோ அது போல் தான் அதிமுக.,வின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியின்போது, மும்முனை மின்சாரம், 24 மணி நேரமும் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டது. ஆனால் இப்போது, மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும் என மக்களால் சொல்ல முடியவில்லை.

வீட்டு வரி, சொத்து வரி ஆகியவை உயர்ந்திருக்கிறது. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது ஏமாற்றி விட்டனர். தற்போது தாய்மார்கள் அந்த பணம் எங்கே என்று கேட்டால் அதற்கு பல காரணங்களை சொல்லி ஏமாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Varadharajulu - Chennai,இந்தியா
11-ஆக-202212:54:14 IST Report Abuse
K.Varadharajulu எடப்பாடி முதல்ல நீ பொதுச்செயலாளர் பதவி உனக்கு கெடைக்குதான்னு பாரு, எப்போ ஜோசியம் பார்க்க ஆரம்பிச்ச, உன் ஆட்சியில நீ பண்ணுன ஊழலுக்கு உன்னோட சொந்தக்காரன், ஒப்பந்தக்காரன் வீட்டுல ரைடு நடகுது அதை பாருய்யா, வந்துட்டாரு யோகியாசிகமணி
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
09-ஆக-202202:18:05 IST Report Abuse
BASKAR TETCHANA இவருக்கே டப்பா டான்ஸ் ஆடுதாம் இந்த லட்சணத்தில் தமிழகத்தில் புரட்சி வெடிக்க போகுதாம். முதலில் உன்னுடன் இருப்பவர்களை கட்டுப்படுத்தி வைக்கவும். இல்லை என்றால் உள்ளுக்குள்ளையே புரட்சி வெடித்து விடும்.
Rate this:
Cancel
09-ஆக-202200:23:02 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் கண்டிப்பாக வெடிக்கும் , கருணா குடும்பம் நாட்டை விட்டு ஓடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X