நாட்டில் கள்ள நோட்டுகள் புழக்கம் குறைவு: மத்திய அரசு

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்யும் அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு பதிலாக, புதிய ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
Fake Money, India, Finance Ministry, கள்ள நோட்டு, இந்தியா, புழக்கம், குறைவு, மத்திய அரசு, நிதி அமைச்சகம்

புதுடில்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்யும் அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு பதிலாக, புதிய ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. கருப்பு பணம், கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது.


latest tamil news



இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, 2016-17ம் நிதியாண்டில் ரூ.43.46 கோடி அளவிற்கு கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்ட நிலையில், 2021-22ல் ரூ.8.25 கோடி அளவிற்கே கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


ஆண்டு வாரியாக..


2016-17ம் நிதி ஆண்டில் ரூ.43,46,75,710
2017-18ம் நிதி ஆண்டில் ரூ.23,34,91,965
2018-19ம் நிதி ஆண்டில் ரூ.8,23,59,960
2019-20 நிதி ஆண்டில் ரூ. 7,48,03,650
2020-21ம் நிதி ஆண்டில் ரூ.5,45,00,125
2021-22ம் நிதி ஆண்டில் ரூ.8,25,93,565

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஆக-202206:23:45 IST Report Abuse
அப்புசாமி பலே...பலே... கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நல்ல நோட்டு மாதிரி அடிக்கிறாங்க போலிருக்கு. டெக்னாலஜி ரொம்ப முன்னேறிடிச்சோ?
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
09-ஆக-202203:36:54 IST Report Abuse
John Miller கருப்பு பணம் இந்தியாவில் இருந்து சுவிஸ் பேங்குக்கு சென்று விட்டதால் இங்கே கருப்பு பணப்புழக்கம் குறைவாக உள்ளது.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
08-ஆக-202221:11:02 IST Report Abuse
Visu Iyer 2020-21 யை 2021-22 இல் அதிகமாக இருக்கிறது என்று இந்த செய்தியே சொல்லுது.. ஆனால் இவுங்க குறைவு என்று சொல்லுவாங்க.. நாம் ஆமாம் என்று சொல்ல வேண்டுமாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X