மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை: ரூ. 698 கோடி ஒதுக்கீடு

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கிட ரூ. 698 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆறு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த திட்டத்தில் லட்சக்கணக்கான
மாணவிகள் ,ரூ.1000 உதவித்தொகை,  ரூ. 698 கோடி, ஒதுக்கீடு

சென்னை: கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கிட ரூ. 698 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின் கீழ், ஆறு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த திட்டத்தில் லட்சக்கணக்கான மாணவிகள் விண்ணபித்து உள்ளனர்.


latest tamil news



இதற்கான கடைசி தேதி கடந்த ஜூலை 18 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 7 ம் தேதி முதல் வங்கி கணக்கில் மாதந்தோறும் வரவு வைக்கப்படும். இதற்காக அரசு ரூ. 698 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.SRIRAM - CHENNAI,இந்தியா
08-ஆக-202219:26:28 IST Report Abuse
C.SRIRAM இதனால் பயன் ஏதும் இல்லாதவர்களுக்கு என்ன லாபம் ?. பொது மக்களின் வரிப்பணத்தை நிர்வகிக்கத்தான் அதிகாரமே ஒழிய அதை இஷ்டப்படி வரி விட்டு வீணடிக்க எந்த அதிகாரமும் இல்லை
Rate this:
John Miller - Hamilton,பெர்முடா
09-ஆக-202200:28:53 IST Report Abuse
John Millerஇதனால் பெண் குழந்தைகள் படிப்பு பாதியில் நிற்காது. சிறுவயதில் குழந்தைகளுக்கு கல்யாணம் நடக்காது. பிள்ளை பெரு தள்ளிப்போய் பெண்களின் உடல் நலம் மேம்படும். ஜனத்தொகை குறையும். பெண்கள் வேலை வாய்ப்புகள் பெரும் வாய்ப்பு அதிகம்,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X