பீஹாரில் பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முறிகிறது?  

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
பீஹாரில் ஏற்பட்டுள்ள பல பரபரப்பு அரசியல் காட்சிகளால், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., இடையேயான கூட்டணி முடிவுக்கு வருவது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கும் இடையே, 1990களில் கூட்டணி உருவானது. இது, பல முறை முறிந்துள்ளது. தற்போது, மீண்டும் கூட்டணி முறிவதற்கான அறிகுறிகள்
 முதல்வர் நிதிஷ்குமார், பாஜ, பீஹார்,  CM Nitish Kumar, BJP, bihar,பீஹாரில் ஏற்பட்டுள்ள பல பரபரப்பு அரசியல் காட்சிகளால், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., இடையேயான கூட்டணி முடிவுக்கு வருவது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கும் இடையே, 1990களில்
கூட்டணி உருவானது.

இது, பல முறை முறிந்துள்ளது. தற்போது, மீண்டும் கூட்டணி முறிவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.கடந்த 2020ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பா.ஜ., அதிக இடங்களில் வென்ற
போதும், ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி நிதிஷ்குமார் முதல்வரானார். ஆனாலும், இரு கட்சிகள் இடையே அடிக்கடி மோதலும், உரசலும் ஏற்பட்டன. தற்போது இந்த மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. பிரதமர் மற்றும் மத்திய அரசின் நிகழ்ச்சிகளை, நிதிஷ்குமார் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். கடைசியாக, பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்த, 'நிடி ஆயோக்' நிகழ்ச்சியை நிதிஷ்குமார் புறக்கணித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவை சந்திக்க நிதிஷ்குமார் அவகாசம் கேட்டுள்ளார்.


latest tamil news

முக்கிய முடிவுமேலும், கட்சியின்எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை இன்று நடத்த திட்டமிட்டுள்ளார். இதில், கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. முக்கிய எதிர்க்கட்சியான முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை இன்று நடத்த உள்ளது.


அரசியல் களம்மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளில், 200 தொகுதிகளில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை பா.ஜ., சமீபத்தில் துவக்கிஉள்ளது. அதனால், 2025ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலின்போது, கூட்டணியில் இருந்து கழற்றி விடப்படலாம் என நிதிஷ்குமார் சந்தேகிக்கிறார். இதனால், பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேற நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பீஹார் அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.


சோனியாவுடன் பேச்சுஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார், பீஹாரில் புதிய அரசு அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் தொலைபேசி வாயிலாக பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், 'தே.ஜ., கூட்டணியிலிருந்து முதலில் வெளியில் வாருங்கள். அதற்கு பின் அரசு அமைப்பது குறித்து பேசுவோம்' என, அவரிடம் சோனியா தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


வந்தால் வரவேற்போம்!கடந்த 2015ல், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அமைத்தது. துணை முதல்வராக இருந்த லாலுவின் மகன் தேஜஸ்வி ஊழல் செய்வதாகக் கூறி, 2017ல் அந்தக் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறினார். இதைத் தொடர்ந்து, பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார்.
தற்போது, பீஹாரில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேசிய துணைத் தலைவர் சிவானந்த் திவாரி கூறியதாவது:நாங்கள் பா.ஜ.,வை எதிர்த்து வருகிறோம். அக்கட்சி உடனான கூட்டணியை முறித்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறினால், அதை வரவேற்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


ஆலோசனை கூட்டம்மத்தியில், 2019ல் மீண்டும் ஆட்சி அமைத்தபோது, ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒரு அமைச்சர் பதவியைத் தருவதாக பா.ஜ., கூறியது. ஆனால், அதை நிதிஷ்குமார் ஏற்கவில்லை.
இதற்கிடையே, அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரான, 'மாஜி' ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்.சி.பி.சிங் மத்திய அமைச்சராக பதவியேற்றார். அவருடைய ராஜ்யசபா எம்.பி., பதவி சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
ஆனால், அவருக்கு ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் வாய்ப்பு தரவில்லை. இதையடுத்து, அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்; சமீபத்தில் கட்சியில் இருந்தும் விலகினார். நிதிஷ்குமார் கூறியதால் தான் மத்திய அமைச்சர் பதவியை ஏற்றதாக ஆர்.சி.பி.சிங் கூறினார்.இந்நிலையில், கட்சியின் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. இது குறித்து, கட்சித் தலைவர் ராஜிவ் ரஞ்சன் கூறியதாவது:
கட்சியின் தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிக்கவே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து எந்த திட்டமும் இல்லை. அதே நேரத்தில் எங்கள் கட்சியைச் சேர்ந்த யார் மத்திய அமைச்சராக வேண்டும் என்பது குறித்து, பா.ஜ., முடிவு செய்ய முடியுமா?
இவ்வாறு அவர் கூறினார். - நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஆக-202208:41:09 IST Report Abuse
இராஜன் Nitish Sir உங்களோட மூக்கண்ணாடி கவர்ச்சியாக உள்ளது. உங்க முகத்துக்கு அழகூட்டுகிறது. அது என்ன விலை ஐயா? ஒரு லட்சம் இருக்குமா? எங்க ஊர்ல ஒரு ஆளு 300 லட்சம் விலைல கைகடிகாரம் வச்சுருக்காடு....ஆமாங்க மெய்யாலுமே ஒரு Watch 3 கோடி ரூபாய். அது மாதிரி 5 வச்சிருக்காரு... இவங்கள எல்லாம் மோடி ஐயா கண்டு கறதே இல்லீங்க.
Rate this:
Cancel
Nachimuthu - mettur,இந்தியா
09-ஆக-202208:17:08 IST Report Abuse
Nachimuthu அவர் ஒரு பச்சோந்தி
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
09-ஆக-202207:13:21 IST Report Abuse
venugopal s நிதிஷ்குமாருக்கு இப்போதாவது நல்ல புத்தி வந்தால் மகிழ்ச்சி. பாஜகவுடன் கூட்டணி இதுவே கடைசி தடவையாக இருக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X