இதே நாளில் அன்று| Dinamalar

இதே நாளில் அன்று

Added : ஆக 08, 2022 | |
ஆகஸ்ட் 9, 1941திருவாரூர் மாவட்டம் கடலங்குடியில், பழனியப்பன் -- தங்கப்பாப்பு தம்பதிக்கு மகனாக, 1941ல், இதேநாளில் பிறந்தவர் க.ப.அறவாணன்.புதுக்கோட்டையில் கல்லுாரி விரிவுரையாளராக பணியை துவக்கிய இவர், பல்வேறு கல்லுாரிகளில் தமிழ் துறை தலைவர், முதல்வர் பொறுப்புகளை வகித்தார். 1998 முதல், 2001 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தராக பணியாற்றினார்.பல்கலை கழகங்களின்


இதே நாளில் அன்று


ஆகஸ்ட் 9, 1941



திருவாரூர் மாவட்டம் கடலங்குடியில், பழனியப்பன் -- தங்கப்பாப்பு தம்பதிக்கு மகனாக, 1941ல், இதேநாளில் பிறந்தவர் க.ப.அறவாணன்.புதுக்கோட்டையில் கல்லுாரி விரிவுரையாளராக பணியை துவக்கிய இவர், பல்வேறு கல்லுாரிகளில் தமிழ் துறை தலைவர், முதல்வர் பொறுப்புகளை வகித்தார். 1998 முதல், 2001 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தராக பணியாற்றினார்.பல்கலை கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினராக இருந்தார். சமூகவியல், கல்வியியல், வரலாறு, திறனாய்வு, மானுடவியல், மொழியியல், இலக்கணம், படைப்பிலக்கியம் சார்ந்து, 56 நுால்களை எழுதியுள்ளார். எழுத்தாளர்களுக்காக, 'அறவாணர் விருதை' வழங்கி வந்தார்.
தமிழக அரசின் சிறந்த நுாலாசிரியர், பேராசிரியர் விருதுகளை பெற்ற இவர், 2018 டிசம்பர், 23ல், தன், 77வது வயதில் மறைந்தார். இவரின் மனைவி தாயம்மாள் ஆய்வாளராகவும், எழுத்தாளராகவும் உள்ளார்.வெள்ளை உடை, தொப்பியுடன் கம்பீரமாக வலம் வந்த தமிழறிஞரின் பிறந்த தினம் இன்று.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X