அனுப்பர்பாளையம்:கோவை குன் ஆட்டோ நிறுவன விற்பனை மேலாளர் அப்துல் ரசாக், கூறியதாவது:இந்தியாவின் முதல் பிரிமியம் எலக்ட்ரிக் பயோ காரை, குன் ஆட்டோ நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளோம். இதன் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும். இது 71.7 கிலோவாட் ஹவர்(கே.டபிள்யூ., ெஹச்) பிளேடு பேட்டரி கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 520 கி.மீ., செல்லும் திறன் கொண்டது.35 நிமிடங்களில் பாஸ்ட் சார்ஜிங் ஆகும் தன்மை உடையது. சி.என்., 95 ஏர் பில்டர் சிஸ்டம், கேமரா, உள்ளிட்ட பல வசதிகள் இதில் உள்ளது.சென்னை, கோவை உட்பட தமிழகத்தில் பல்வேறு கிளைகளுடன் குன் ஆட்டோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வசதிகள் கொண்ட 'இ6' பயோ கார், காற்று மாசு ஏற்படுவதை தடுக்கிறது. புகையில்லா உலகத்தை படைக்க பிரிமியம் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவதே சிறந்ததாகும்.விவரங்களுக்கு 85089 76551, 98410 49786 தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.