மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 08, 2022 | |
மின்சார சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று மின்வாரிய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர். தங்களது எதிர்ப்பை
மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்

மின்சார சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று மின்வாரிய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர். தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், மின்வாரிய ஊழியர்கள் நேற்று எவ்வித பணியும் செய்யாமல் அலுவலகத்தில் இருந்தனர்.

நேற்று, அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசிய நிலையில், ஆங்காங்கே மின்கம்பிகள் மீது, மரக்கிளைகள் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும், மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்யாமல், தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், பல மணி நேரம் மின்வெட்டு நீடித்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X