காஞ்சி / புகார் பெட்டி

Added : ஆக 08, 2022 | |
Advertisement
பூங்கா சீரமைக்கப்படுமா?காஞ்சிபுரம் அரசு நகரில், மத்திய அரசின், 'அம்ரூட்' திட்டத்தின் கீழ், 2017-18 ல், அனைத்து வசதிகளுடன் புதிதாக பூங்கா அமைக்கப்பட்டது. இப்பூங்காவை அரசு நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சிறுவர்-சிறுமியரும், பெரியவர்களும் பயன்படுத்தி வந்தனர். 2020ல், கொரோனா முழு ஊரடங்கின்போது, பூங்கா மூடப்பட்டது. பின், மாநகராட்சி நிர்வாகம் பூங்காவை

பூங்கா சீரமைக்கப்படுமா?



காஞ்சிபுரம் அரசு நகரில், மத்திய அரசின், 'அம்ரூட்' திட்டத்தின் கீழ், 2017-18 ல், அனைத்து வசதிகளுடன் புதிதாக பூங்கா அமைக்கப்பட்டது. இப்பூங்காவை அரசு நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சிறுவர்-சிறுமியரும், பெரியவர்களும் பயன்படுத்தி வந்தனர். 2020ல், கொரோனா முழு ஊரடங்கின்போது, பூங்கா மூடப்பட்டது. பின், மாநகராட்சி நிர்வாகம் பூங்காவை பராமரிக்கவில்லை. இதனால், பூங்காவில் புதர் மண்டியுள்ளது. மலர்செடிகள் செடிகள் கருகிவிட்டன. கழிப்பறை கதவு மாயமாகியுள்ளது. இருக்கைகள் சேதமடைந்துள்ளன. மின் விளக்குகள் உடைக்கப்பட்டுள்ளன. எனவே, மாநகராட்சி நிர்வாகம் பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.- என்.ஜான்சன், காஞ்சிபுரம்.வாகனங்களை அகற்ற வேண்டும்காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் உள்பகுதியில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அப்புறப்படுத்தாமல் அப்படியே கிடக்கிறது. தாலுகா காவல் நிலையம் இங்கு இயங்கும் போது இந்த வாகனங்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. காவல் நிலையம் திருவீதி பள்ளம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இரு ஆண்டு ஆகிறது. ஆனால் வாகனங்கள் அப்புறப்படுத்தாமல் உள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எல். ராஜேந்திரன், காஞ்சிபுரம்.சாலையை செப்பணிட வேண்டும்காஞ்சிபுரம்- அரக்கோணம் இரு வழி சாலை, நான்கு வழி சாலையாக விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், ஆங்காங்கே சிறிய தரைப்பாலங்கள் மற்றும் உயர் மட்ட தரைப்பாலங்கள் வேலை முடிந்து வாகனப் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டு உள்ளன. சரியான அளவில் செப்பணிடாததால், வாகனங்கள் சிக்கி கொள்கிறது. நேற்று முன்தினம், பருவமேடு அருகே அரசு விரைவு பேருந்து சிக்கியது. இதை தவிர்க்க, தரைப்பாலங்கள் அருகே சாலை முறையாக செப்பணிட வேண்டும்.----------என். சுதாகர், புத்தேரி.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X