எக்ஸ்குளுசிவ் செய்தி

இனி நம்ம ஆட்கள் வசூலிப்பர்! :மேயர் கணவர் 'ஆடியோ'வால் சலசலப்பு

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
வாரச்சந்தையில் இனி நம்ம ஆட்கள் வசூலிப்பார்கள்' என, கோவைமேயரின் கணவர் ஆனந்தகுமார் பேசிய உரையாடல்,சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கோவை மேயர்கல்பனாவின் கணவர்ஆனந்தகுமார், மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாக அலுவலர்கள், கட்சியினர் மத்தியில் பரவலாககுற்றச்சாட்டு நிலவுகிறது.இந்நிலையில், 'கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் வாரச்சந்தை
 நம்ம ஆட்கள் வசூலிப்பர்! :மேயர் கணவர் ஆடியோ'  சலசலப்பு

வாரச்சந்தையில் இனி நம்ம ஆட்கள் வசூலிப்பார்கள்' என, கோவை
மேயரின் கணவர் ஆனந்தகுமார் பேசிய உரையாடல்,சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மேயர்கல்பனாவின் கணவர்ஆனந்தகுமார், மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாக அலுவலர்கள், கட்சியினர் மத்தியில் பரவலாககுற்றச்சாட்டு நிலவுகிறது.இந்நிலையில், 'கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் வாரச்சந்தை வசூலை, இனி நாங்கள் வசூலித்துக் கொள்கிறோம்' என, மேயரின் கணவர் ஆனந்தகுமார் பேசும் 'ஆடியோ' சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

இந்த உரையாடலில், குமார், சம்பத் என்பவர்கள் பேசுகின்றனர். சற்று நேரத்தில் உரையாடலில் இணையும் ஆனந்த், 'அடுத்த வாரத்தில் இருந்து நம்ம ஆட்கள் சந்தைக்கடையில் வசூலித்துக் கொள்வார்கள்' என, கூறுகிறார்.எதிர்முனையில் பேசுபவர், 'எங்களுக்கு பிரச்னை ஒன்றும் இல்லை. நீங்கள் கோவில் கமிட்டியில் பேசிக் கொள்ளுங்கள்' என்கிறார்.

இதுதொடர்பாக,மேயரின் கணவர் ஆனந்தகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
குட்டையாக இருந்த இடத்தில் மண்ணை கொட்டி சமப்படுத்தி,சந்தையாக நடத்துகின்றனர். கோவில் இடம் எனக்கூறி, 'டோக்கன்' அச்சடித்து, சம்பத் என்பவர் வசூலிக்கிறார்.
அவ்விடத்தில் போக்குவரத்து பிரச்னை ஏற்படுகிறது. இதுதொடர்பாக, மூன்று ஆண்டுகளாகவே பேசி வருகிறோம். குமார் என்ற பெயரில் எனக்கு மூன்று நண்பர்கள் இருக்கின்றனர். ஆடியோவில் என்னை போல், 'டப்பிங்' பேசியிருக்கின்றனர்.யார் யார் குரல் என ஆய்வு செய்ய வேண்டும். அதில், நண்பர்கள் போல தான் பேசிக் கொள்கின்றனர். யாரையும் மிரட்டவில்லை.
இவ்வாறு அவர்கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raa - Chennai,இந்தியா
10-ஆக-202212:46:43 IST Report Abuse
Raa ஆமாம்... 'கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் வாரச்சந்தை வசூலை, என்கிறார்களே HR&CE கோயிலா அல்லது தனியார் கோயிலா? இருவரும் என்ன புல்லை மேய்ந்து கொண்டு உள்ளனரா?
Rate this:
Cancel
Raa - Chennai,இந்தியா
10-ஆக-202212:44:47 IST Report Abuse
Raa aam
Rate this:
Cancel
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
10-ஆக-202210:29:34 IST Report Abuse
 Ganapathy Subramanian கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும். இது அப்போது. திமுக அல்லக்கை தூக்கி போட்ட துரும்பும் கரப்ஷன் கலெக்ஷன் எல்லாம் செய்யும். இது தற்கால நடப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X