தலையில் தேங்காய் உடைப்பு :கோவில் திருவிழாவில் வழிபாடு

Added : ஆக 08, 2022 | |
Advertisement
வடமதுரை :கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி பெற்றும் வினோதமாக நேர்த்திக்கடன் செலுத்தி, வழிபாடு செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே எட்டிகுளத்துபட்டியில், சித்தண்ணன், கசுவம்மாள் கோவில் உள்ளது. இங்கு, ஐந்து ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம் திருவிழா துவங்கியது. நேற்று காலை முதலியார் குளத்தில் இருந்து சுவாமி
 தலையில் தேங்காய் உடைப்பு ,கோவில் திருவிழா , வழிபாடு

வடமதுரை :கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி பெற்றும் வினோதமாக நேர்த்திக்கடன் செலுத்தி, வழிபாடு செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே எட்டிகுளத்துபட்டியில், சித்தண்ணன், கசுவம்மாள் கோவில் உள்ளது. இங்கு, ஐந்து ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம் திருவிழா துவங்கியது.

நேற்று காலை முதலியார் குளத்தில் இருந்து சுவாமி அலங்கரிக்கப்பட்டு, இ.புதுார் வழியே சேர்வை ஆட்டத்துடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தது.விரதமிருந்த பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள், கோவில் முன் அமர்ந்திருக்க, பூஜாரி நாகராஜன், பக்தர்கள் தலையில் ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார்.தொடர்ந்து சேர்வைக்காரரிடம் பக்தர்கள் சாட்டையடி பெற்றபடி, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X