ராஜஸ்தான் கோவிலில் நெரிசல்; 3 பெண்கள் பலி; 4 பேர் காயம்

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | |
Advertisement
சிகர்-ராஜஸ்தானில் கிருஷ்ணர் கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்தனர். காயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஹடு ஷ்யாம்ஜி என்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. ஏகாதசி நாளான நேற்று அதிகாலையில் இங்கு தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அதிகாலை 4:30 மணிக்கு கோவில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிகர்-ராஜஸ்தானில் கிருஷ்ணர் கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்தனர். காயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



latest tamil news


ராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஹடு ஷ்யாம்ஜி என்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. ஏகாதசி நாளான நேற்று அதிகாலையில் இங்கு தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அதிகாலை 4:30 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. பக்தர்கள் உள்ளே சென்றனர்.

அப்போது சாந்திதேவி, 63, என்ற பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சரிந்தார். அவருக்கு பின்னால் வந்த இரண்டு பெண்களும் நிலைகுலைந்து தடுமாறி விழுந்தனர். இதைத் தொடர்ந்து வந்தவர்கள் முண்டியடித்து வந்ததால் கீழே விழுந்த மூன்று பெண்களுமே பலத்த காயம் அடைந்து அதே இடத்தில் உயிரிழந்தனர்.


latest tamil news



நெரிசலில் சிக்கி காயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.விபத்து குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிலில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X