துணை ஜனாதிபதி தேர்தல் கோபம் அடங்காத மம்தா

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
துணை ஜனாதிபதி தேர்தலில் ஜக்தீப் தன்கர் வென்றதும், மரியாதை நிமித்தமாக பல எதிர்க்கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2019ல் ஜக்தீப் தன்கர் கவர்னராக பதவியேற்ற நாள் முதல், மாநில அரசு அவருடன்
மம்தா கோபம், துணை ஜனாதிபதி


துணை ஜனாதிபதி தேர்தலில் ஜக்தீப் தன்கர் வென்றதும், மரியாதை நிமித்தமாக பல எதிர்க்கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2019ல் ஜக்தீப் தன்கர் கவர்னராக பதவியேற்ற நாள் முதல்,
மாநில அரசு அவருடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்தது.


latest tamil news



துணை ஜனாதிபதி தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜக்தீப் தன்கர் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் காங்., மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டார்.இத்தேர்தலில் வெற்றி கிடைக்காது என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெரியும். இருந்தும் தேர்தலை புறக்கணிப்பதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.
இது எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாததை வெளிப்படுத்தியது. தேர்தலுக்கு பின் அளித்த பேட்டியில், 'சில எதிர்க்கட்சிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பா.ஜ.,வுக்கு உதவின' என, மார்கரெட் ஆல்வா கூறினார்.இது ஒருபுறம் இருக்க, மரியாதை நிமித்தமாக மார்கரெட் ஆல்வா தேர்தல் வெற்றிக்காக தன்கருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதுபோலவே, பல எதிர்க்கட்சி தலைவர்களும் வாழ்த்துதெரிவித்தனர்.ஆனால், மம்தா பானர்ஜி மட்டும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது அரசியல் ரீதியில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. - புதுடில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
11-ஆக-202217:16:14 IST Report Abuse
MARUTHU PANDIAR மூர்க்கத்தில் ஊறிய மூளை வேறு எப்படி வேலை செய்யும் என்று கேட்கிறார்கள்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
09-ஆக-202214:52:38 IST Report Abuse
jayvee மம்தாவுக்கு மூளை வளர்ச்சி குறைச்சல்தான்.. நாகரீகமான விஷயங்களில்
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஆக-202208:45:38 IST Report Abuse
Sriram V Don't expect ethical values from unethical corrupt leaders
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X