பயங்கரவாத அமைப்பினர் வீடுகளில் சோதனை

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | |
Advertisement
ஜம்மு-தடை செய்யப்பட்டு உள்ள ஜே.இ.எல்., எனப்படும் ஜமாயத் - இ - இஸ்லாமி அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை நடத்தியது. ஜம்மு - காஷ்மீரில் இயங்கி வரும் ஜே.இ.எல்., அமைப்பை, மத்திய அரசு ஐந்தாண்டுகளுக்கு தடை செய்து, 2019ல் உத்தரவு பிறப்பித்தது. இந்த அமைப்புக்கு தடை செய்யப்பட்ட பல பயங்கரவாத அமைப்புகளுடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜம்மு-தடை செய்யப்பட்டு உள்ள ஜே.இ.எல்., எனப்படும் ஜமாயத் - இ - இஸ்லாமி அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை நடத்தியது.



latest tamil news


ஜம்மு - காஷ்மீரில் இயங்கி வரும் ஜே.இ.எல்., அமைப்பை, மத்திய அரசு ஐந்தாண்டுகளுக்கு தடை செய்து, 2019ல் உத்தரவு பிறப்பித்தது. இந்த அமைப்புக்கு தடை செய்யப்பட்ட பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில், பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுவது தொடர்பாக, என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது.


latest tamil news


இதன் ஒரு பகுதியாக, ஜே.இ.எல்., பயங்கரவாத அமைப்பின் நிர்வாகிகளுக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடந்தது.குறிப்பாக ஜம்மு மற்றும் தோடா மாவட்டங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

பெண் கைது

நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த அன்சருல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்பினர், வடகிழக்கு மாநிலமான அசாமுக்குள் நுழைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்றுள்ளனர். இது தொடர்பாக மாநில அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகளில், 25க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், அசாமின் துப்ரி மாவட்டத்தில், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக, ஜஹூரா காதுன் என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள அவருடைய கணவரை தேடி வருகின்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X