நிலக்கரி சுரங்க மோசடி: மாஜி' அதிகாரிக்கு சிறை

Added : ஆக 09, 2022 | |
Advertisement
புதுடில்லி-மஹாராஷ்டிராவில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில், மத்திய அரசின் முன்னாள் நிலக்கரி துறை செயலர் எச்.சி.குப்தாவுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, நாடு முழுதும் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதில் பல முறைகேடுகள் நடந்தன. இது தொடர்பாக,
நிலக்கரி சுரங்க மோசடி: மாஜி' அதிகாரிக்கு சிறை

புதுடில்லி-மஹாராஷ்டிராவில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில், மத்திய அரசின் முன்னாள் நிலக்கரி துறை செயலர் எச்.சி.குப்தாவுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, நாடு முழுதும் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதில் பல முறைகேடுகள் நடந்தன. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் புதுடில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.மஹாராஷ்டிராவின் லோஹாரா கிழக்கு நிலக்கரி சுரங்கத்தை, 'கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ்' என்ற நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டதில் நடந்த மோசடி குறித்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.இதில், முன்னாள் நிலக்கரி துறை செயலர் எச்.சி.குப்தாவுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி துறையின் முன்னாள் இணைச் செயலர் கே.எஸ்.குரோபாவுக்கு, இரண்டாண்டு சிறை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன் இயக்குனர் முகேஷ் குப்தாவுக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.எச்.சி.குப்தா ஏற்கனவே மூன்று வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார். இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்குகள், புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தற்போது அவர் ஜாமினில் உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X