மலிவு 'மொபைல்போன்' விற்க சீனாவுக்கு தடை?

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி-இந்திய சந்தைகளில் சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், 12 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான 'மொபைல்போன்'களை, விற்பதற்கு, அந்த நாட்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உலகிலேயே அதிக அளவில் மொபைல்போன்கள் விற்பனையாகும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பல நாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-இந்திய சந்தைகளில் சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், 12 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான 'மொபைல்போன்'களை, விற்பதற்கு, அந்த நாட்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



latest tamil news


உலகிலேயே அதிக அளவில் மொபைல்போன்கள் விற்பனையாகும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பல நாட்டு தயாரிப்புகள் இங்கு விற்கப்பட்டாலும், நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களே கோலோச்சி வருகின்றன.இதனால் உள்நாட்டு மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதையடுத்து, 12 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலைஉள்ள மொபைல்போன்களை விற்க சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.நம் நாட்டில் விற்பனையாகும் மொபைல்போன்களில், 12 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக விற்கும் போன்களின் அளவு மூன்றில் ஒரு பங்காக உள்ளது.


latest tamil news


இதில், 80 சதவீதம் சீன நிறுவனங்களின் தயாரிப்பாகும்.இதையடுத்து, சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், புதிய கட்டுப்பாட்டை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், சீனாவைச் சேர்ந்த 'ஜியோமி, ரியல்மீ, ஓப்போ' உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
09-ஆக-202209:05:51 IST Report Abuse
R.RAMACHANDRAN சீனர்கள் குறைந்த லாபம் வைத்து அதிக பொருட்களை விற்கின்றனர். அவை தரமாகவும் உள்ளது. அதனால்தான் மக்கள் விரும்பி அவற்றை வாங்குகின்றனர்.அவர்களுடன் போட்டி போட ஏற்பாடுகள் செய்யாமல் பொறாமையாக எதை எதையோ செய்து கொள்ளை லாபம் காண்பவர்களை ஊக்குவிக்கின்றனர்.
Rate this:
09-ஆக-202210:53:16 IST Report Abuse
ஆரூர் ரங்சீனன் அந்த லாபத்தை😛 மாவோயிஸ்ட். லஷ்கர் வளர்ச்சிக்குக் கொடுப்பான். சந்தோஷமா?...
Rate this:
Cancel
09-ஆக-202205:59:59 IST Report Abuse
அப்பாசாமி ....அவன் சரியா 12001 ரூவாய்க்கு விப்பான். எல்லாம் நம்ம 26 கிலோ சிப்பம் அரிசி டெக்னிக் தான்.
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
09-ஆக-202200:39:28 IST Report Abuse
அன்பு இருபத்தைந்தார்த்துக்கு கீழ் உள்ள சீனாவில் தயாரிக்கப்பட்ட போன்களை இந்தியாவில் விற்க தடைகொண்டுவர வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்படும் போன்களுக்கே விற்க உரிமை கொடுக்க வேண்டும். உள்நாட்டு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். இந்திய பணம் சீனாவிற்கு செல்வதை தடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X