உ.பி., அரசியல் பிரமுகரை கைது செய்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம் அறிவிப்பு

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
நொய்டா-'உத்தர பிரதேசத்தில், குடியிருப்பு பகுதியில் பெண்ணை தாக்கியதாக கூறப்படும் அரசியல்வாதியை கைது செய்யும் போலீசாருக்கு, 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும்' என உயரதிகாரிகள் அறிவித்துள்ளனர் .உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நொய்டாவின் 'கிராண்ட் ஓமேக்ஸ் சொசைட்டி' என்ற குடியிருப்பு பகுதியில், ஸ்ரீகாந்த்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நொய்டா-'உத்தர பிரதேசத்தில், குடியிருப்பு பகுதியில் பெண்ணை தாக்கியதாக கூறப்படும் அரசியல்வாதியை கைது செய்யும் போலீசாருக்கு, 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும்' என உயரதிகாரிகள் அறிவித்துள்ளனர்



latest tamil news


.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நொய்டாவின் 'கிராண்ட் ஓமேக்ஸ் சொசைட்டி' என்ற குடியிருப்பு பகுதியில், ஸ்ரீகாந்த் தியாகி என்ற அரசியல்வாதி வசித்து வருகிறார். இவர், பா.ஜ., பிரமுகர் என கூறி வந்துள்ளார். ஆனால், பா.ஜ., தரப்பு அதை மறுத்துள்ளது.இவரது வீட்டுக்கு எதிரே உள்ள பொது இடத்தில், மரம் நடும் விவகாரம் தொடர்பாக, ஸ்ரீகாந்த் தியாகிக்கும், அவரது வீட்டருகே வசிக்கும் பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, ஸ்ரீகாந்த் தியாகி அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்தப் பெண் போலீசில் புகார் அளித்தார்.ஸ்ரீகாந்த் தியாகி மீது, பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவம் நடந்த 5ம் தேதி இரவு, ஸ்ரீகாந்த் தியாகி மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். 'அவரை கைது செய்யும் போலீசாருக்கு, 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும்' என, கவுதம் புத்தா நகர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அறிவித்துள்ளது.இந்த வழக்கில் அலட்சியமாகச் செயல்பட்ட ஆறு போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.


latest tamil news




ஆக்கிரமிப்பு அகற்றம்!

நொய்டாவில் உள்ள குடியிருப்பு சொசைட்டியின் தரை தளத்தில், ஸ்ரீகாந்த் தியாகியின் வீடு உள்ளது. வீட்டுக்கு வெளியே உள்ள பொது இடத்தில், தற்காலிக கூரை அமைத்து அதை ஆக்கிரமித்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பை அரசு அதிகாரிகள், 'புல்டோசர்' வைத்து நேற்று காலை அகற்றினர். அரசின் நடவடிக்கைக்கு, குடியிருப்புவாசிகள் நன்றி தெரிவித்தனர்.



பிரியங்கா குற்றச்சாட்டு!

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா கூறியதாவது:நொய்டாவைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகர் சட்டவிரோத ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்பது அரசுக்கு இவ்வளவு ஆண்டுகளாக தெரியாமல் இருந்ததா? இந்த புல்டோசர் நடவடிக்கை எல்லாம் வெறும் நாடகம். பெண்ணிடம் அநாகரிகமாக நடக்க, இவருக்கு தைரியம் கொடுத்தது யார்?இவ்வாறு அவர் கூறினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
09-ஆக-202216:41:22 IST Report Abuse
Rafi பெண்களுக்கு இடர் செய்பவர்களில் பலர் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதால் , வெளில தேடி கொண்டிருப்பார்கள்,
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
09-ஆக-202201:07:37 IST Report Abuse
Venkatakrishnan அடடே... ராமர் ஆட்சியில் அதர்மவாதிகளா...? வேறு ஏதாவது ஊரக இருக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X