சிவசேனா சின்னம் யாருக்கு: நான்கு வாரம் அவகாசம் கேட்டது உத்தவ் தரப்பு

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி : சிவசேனா கட்சியின் சின்னம் யாருக்கு என்பது குறித்து ஆவணங்களை தாக்கல் செய்ய நான்கு வாரங்கள் அவகாசம் கேட்டுள்ளது உத்தவ் தாக்கரே தரப்புமஹாராஷ்டிராவில் இம்மாத துவக்கத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், உத்தவ் தாக்கரேவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, முதல்வர்
சிவசேனா சின்னம் யாருக்கு  நான்கு வாரம் அவகாசம் கேட்டது உத்தவ் தரப்பு

புதுடில்லி : சிவசேனா கட்சியின் சின்னம் யாருக்கு என்பது குறித்து ஆவணங்களை தாக்கல் செய்ய நான்கு வாரங்கள் அவகாசம் கேட்டுள்ளது உத்தவ் தாக்கரே தரப்பு

மஹாராஷ்டிராவில் இம்மாத துவக்கத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், உத்தவ் தாக்கரேவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகினார். பா.ஜ., ஆதரவுடன், மஹாராஷ்டிர முதல்வராகஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார்.


latest tamil news



இந்நிலையில் சிவசேனா கட்சியின் சின்னமான வில், அம்பு சின்னம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய உரிய சான்றுகளை வழங்கும்படி, உத்தவ் தாக்கரே, அதிருப்தி குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஆக.8-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆவணங்களை சமர்பிக்க நான்கு வாரங்கள் அவகாசம் கோரியுள்ளது உத்தவ் தாக்கரே தரப்பு .
கட்சி அமைப்புகளில் தங்களுக்கு உள்ள ஆதரவு குறித்த சான்றுகளின் அடிப்படையில், யாருக்கு சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
09-ஆக-202211:21:58 IST Report Abuse
duruvasar பன்னிர்செல்வம் உத்தவ் தாக்கரே நல்ல கூட்டணி. அடுத்து மூத்த வழக்கறிஞர் வர இருப்பார். அப்பறம் எதிர் தரப்பு வாதத்தை தமிழ்/ மராத்தி மொழியில் மொழி மாற்றம் செய்து கொடுக்க கோரிக்கை, வழக்கறிஞருக்கு கொரானா பாதிப்பு இப்படி நெறைய ஐட்ங்கள் வெசிருபாங்க. இந்த கொரான வாய்தாவுக்கு அய்யா ஆர் எஸ் பாரதி அவர்களின் உதவியை நாடலாம்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-ஆக-202208:12:40 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சிவசேனா ன்னு ஒரு சைடுக்கும், சிவகணங்கள் ன்னு இன்னொரு சைடுக்கும் பெயர் கொடுத்துடலாம். மொத்தத்தில் வானரசேனையின் கட்டுப்பாட்டில் இருக்குது.
Rate this:
duruvasar - indraprastham,இந்தியா
09-ஆக-202218:23:57 IST Report Abuse
duruvasarஅசுரன் சேனை பயப்படுவதில்லை நியாயம் இருக்கிறது ....
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
09-ஆக-202207:52:14 IST Report Abuse
a natanasabapathy தேவை இல்லாமல் வழக்கை இழுத்து அடிக்கிறார் மெஜாரிட்டி mla mp shinde பக்கம் உள்ளனர் என்பது நிரூபணம் ஆகி விட்டது .பின் விசாரணை என்ன தள்ளி vaippu என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X