வங்கதேசத்தில் எரிபொருள் விலை உயர்வு: நாடு முழுதும் வெடித்தது போராட்டம்

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
டாக்கா-வங்கதேசத்தில், இதுவரை இல்லாத வகையில், பெட்ரோல் - டீசல் விலை, 52 சதவீதம் உயர்த்தப்பட்டதை அடுத்து, நாடு முழுதும் போராட்டம் வெடித்துள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசம், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த சில மாதங்களாகவே, அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 37 ரூபாயும், டீசல்

டாக்கா-வங்கதேசத்தில், இதுவரை இல்லாத வகையில், பெட்ரோல் - டீசல் விலை, 52 சதவீதம் உயர்த்தப்பட்டதை அடுத்து, நாடு முழுதும் போராட்டம் வெடித்துள்ளது.




latest tamil news


நம் அண்டை நாடான வங்கதேசம், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த சில மாதங்களாகவே, அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 37 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 28 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன.'வங்கதேசம் தனி நாடாக உருவாகி இத்தனை ஆண்டுகளில், எரிபொருள் விலை 52 சதவீதம் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறை' என, பொருளாதார நிபுணர் கள் தெரிவித்தனர்.



இந்த விலை உயர்வு, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. விலை உயர்வு அறிவிக்கப்பட்ட 5ம் தேதியன்று, நுாற்றுக்கணக்கான மக்கள் பெட்ரோல் 'பங்க்'குகளில் குவிந்தனர். இதனால், பதற்றமான சூழல் நிலவியது.பிரதமர் ஷேக் ஹசீனா அரசின் இந்த முடிவுக்கு எதிராக, பல்வேறு அமைப்பினரும் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள், கண்டன பேரணிகளை நடத்தி வருகின்றனர்.



இந்த விலை ஏற்றம் குறித்து, வங்கதேசத்தின் மின்சாரம் மற்றும் எரிபொருள் துறை அமைச்சர் நஸ்ருல் ஹமீத் கூறியதாவது:கடந்த ஆறு மாதங்களில், 'பங்களாதேஷ் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' நிறுவனத்துக்கு, 800 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த கடுமையான விலை ஏற்றத்தை மக்களால் தாங்க முடியாது என்பது தெரியும். ஆனால், இதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை. மக்கள் சற்று அமைதி காக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



latest tamil news


சீனா உதவியை நாடும் வங்கதேசம்!

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளானதை அடுத்து, அவர்களில் ஏழு லட்சம் பேர், 2017ல் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். சீனாவின் வேண்டுகோளை ஏற்று, வங்கதேசம் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு தஞ்சம் அளித்தது. இவர்களை மியான்மர் திரும்புமாறு, வங்கதேச அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், அச்சம் காரணமாக, அகதிகள் திரும்ப மறுக்கின்றனர். இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, சமீபத்தில் வங்கதேசம் வந்தார். அவரிடம் அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்ப உதவிடுமாறு, வங்கதேசம் கோரிக்கை வைத்துஉள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh - chennai,இந்தியா
09-ஆக-202211:41:30 IST Report Abuse
ramesh நாங்கள் கடந்த எட்டு ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல்க்கு நூறு சதவிகிதமும் காஸ்க்கு நூற்றி ஐம்பது சதவிகிதமும் உயர்த்தி சாதனை புரிந்து இருக்கிறோம். நீங்க எல்லாம் சுண்டைக்காய். எங்களிடம் முடியுமா.
Rate this:
raja - Cotonou,பெனின்
09-ஆக-202212:37:08 IST Report Abuse
rajaஇதுனாவது பரவாயில்லை கொத்தடிமையே வந்த ஒருவருடத்திலையே திருட்டு திராவிட ஓங்கோல் கொள்ளையன் விடியாமூஞ்சி சொத்து வரியை 150 சதம் உயர்த்தி உருவிக்கொண்டு இருக்கிறார் அத கேளு........
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
10-ஆக-202213:06:45 IST Report Abuse
வாய்மையே வெல்லும்தத்திக்கு நூறு அல்லக்கை .. அம்புட்டு காசு புரளுது.. புளுகுமோட்டை அவிழ்த்துவிட.....
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
09-ஆக-202209:39:16 IST Report Abuse
Sampath Kumar வங்க தேசத்தில் விலை நாற்பத்தி ஐந்து ரூபாய்தான் இந்தியாவில் நூறு தொட்டு விட்டது தற்சமயம் வங்கத்தில் நூறை எட்டி விட்டது அதுனால தான் மக்கள் போராட்டம்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-ஆக-202209:12:38 IST Report Abuse
Kasimani Baskaran பங்களாதேசில் 74.00 இந்தியாவில் சராசரி 110 க்கு மேல். அதாவது சப்சிடி அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X