பாதுகாப்பு சோதனைகள் விமான நிலையங்களில் தீவிரம்

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | |
Advertisement
சென்னை-சுதந்திர தின பாதுகாப்பு சோதனைகள் துவங்கி உள்ளதால், விமானப் பயணியர் முன்கூட்டியே விமான நிலையம் வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.சென்னை விமான

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-சுதந்திர தின பாதுகாப்பு சோதனைகள் துவங்கி உள்ளதால், விமானப் பயணியர் முன்கூட்டியே விமான நிலையம் வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.




latest tamil news


சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பை அதிகரிக்கும் பணிகள் துவங்கி உள்ளன.



latest tamil news


இதனால், விமானப் பயணியர் முன்கூட்டியே வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இது குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால், வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான பயணியர் முன்கூட்டியே வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.பாதுகாப்பு சோதனைகளின்போது அதிக நேரம் பிடிக்கும். இதனால், பயணியர் விமானத்தை தவற விடுவதை தவிர்க்க, முன்கூட்டியே வர அறிவுறுத்தப் படுகின்றனர். வரும் 20ம் தேதி வரை, இந்த தீவிர சோதனை தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X