ஆளுங்கட்சி பொறுப்பு ஏலம்... உடன்பிறப்புகள் சோகமோ சோகம்!

Added : ஆக 09, 2022 | |
Advertisement
சாரல் மழை பெய்துகொண்டே இருந்ததால், 'ரெயின் கோட்' அணிந்துகொண்டு, சித்ராவும், மித்ராவும் நகர்வலத்துக்கு புறப்பட்டனர்.காந்திபுரத்தில் இருந்து வடகோவை மேம்பாலம் வழியாக சென்றபோது, தி.மு.க., அலுவலகத்தை பார்த்த மித்ரா, ''ஏன்க்கா, ஆளுங்கட்சிக்காரங்க நடத்துன பேரணியில், தொண்டர்கள் கூட்டம் ரொம்பவும் குறைவா இருந்துச்சாமே... வார்டுக்கு, 10 பேருன்னு கணக்கு போட்டாலே, 100 வார்டுக்கு,
ஆளுங்கட்சி பொறுப்பு ஏலம்... உடன்பிறப்புகள் சோகமோ சோகம்!

சாரல் மழை பெய்துகொண்டே இருந்ததால், 'ரெயின் கோட்' அணிந்துகொண்டு, சித்ராவும், மித்ராவும் நகர்வலத்துக்கு புறப்பட்டனர்.

காந்திபுரத்தில் இருந்து வடகோவை மேம்பாலம் வழியாக சென்றபோது, தி.மு.க., அலுவலகத்தை பார்த்த மித்ரா, ''ஏன்க்கா, ஆளுங்கட்சிக்காரங்க நடத்துன பேரணியில், தொண்டர்கள் கூட்டம் ரொம்பவும் குறைவா இருந்துச்சாமே... வார்டுக்கு, 10 பேருன்னு கணக்கு போட்டாலே, 100 வார்டுக்கு, 1,000 பேர் வந்திருக்கணுமேன்னு, உளவுத்துறை போலீஸ்காரங்க பேசிட்டு இருந்தாங்களாமே,'' என கேட்டாள்.''அதுவா, ஆளுங்கட்சியில் உட்கட்சி தேர்தல் நடந்துட்டு இருக்கு. வார்டு நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகளை ஏற்கனவே தேர்வு செஞ்சு வச்சிருக்காங்க; இன்னும் வெளியிடாம, 'ரகசியமா' வச்சிருக்காங்க. மாவட்ட செயலாளர்களை அறிவிச்ச பிறகே, அவுங்களுக்கு தோதான நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவாங்களாம். இதனால, நாம ஏன் செலவு செய்யணும்னு கட்சிக்காரங்க ஒதுங்கி நிக்கிறாங்களாம்,''''அதெல்லாம் இருக்கட்டும். கட்சி பொறுப்பு ஏலம் விடப்படுறதா, உடன்பிறப்புகள் புலம்பிக்கிட்டு இருக்காங்களே,''''அன்னுார் வடக்கு ஒன்றிய செயலாளர் பதவியை கைப்பத்துறதுல ரெண்டு பேர் முட்டி மோதுறாங்க. ஒருத்தரு, 40 லட்சமும், இன்னொருத்தரு, 25 லட்சமும் கொடுத்திருக்காங்களாம். இதுல ஒருத்தருக்கு பதவி உறுதிங்கிறதுனால, 25 வருஷமா கட்சியில இருக்கற சீனியர்கள் நொந்து போயி இருக்காங்களாம்,''அப்போது, அவர்களை போலீஸ் ஜீப் ஒன்று கடந்து சென்றது.அதை கவனித்த மித்ரா, ''அக்கா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ரேஸ்கோர்ஸ் ஏரியா பெயரை அடைமொழியா வச்சிருக்கிற ஆளுங்கட்சி சினிமா தயாரிப்பாளர் ஒருத்தரின் காரை, இன்னொரு கார் மோதிருக்கு. யார் புகார் கொடுத்தாலும், வழக்கு பதியச் சொல்லி, போலீஸ் கமிஷனர் ஆர்டர் போட்டிருக்கிறதுனால, போலீஸ்காரங்க துருவி துருவி விசாரிச்சிருக்காங்க,''''அவுங்களுக்கு மேலிடத்துல இருந்து அழுத்தம் வந்திருக்கு. அதுக்கப்புறம் கார் டிரைவர், 'எஸ்கேப்' ஆகிட்டாராம்; புகார் கொடுத்தவருக்கும், மேலிடத்து விவகாரம்; அமைதியா இருங்கன்னு புத்திமதி சொல்லியிருக்காங்களாம். அந்த கார், போலி மது சப்ளை செய்றதுக்கு யூஸ் பண்றதுன்னு கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க. ஆவாரம்பாளையத்துல குடோன் செயல்படுதாம். ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு தொடர்பு இருக்கறதா சொல்றதுனால, ஆபீசர்ஸ் கண்டுக்காம இருக்காங்களாம்,''''சூலுாருக்கு போனா, எந்நேரமும் 'சரக்கு' வாங்கலாம்னு சொல்றாங்களே... உண்மையா''''அந்த ஏரியாவுல இருக்கற தனியார் ஏ.சி., பார் ரொம்ப பேமஸ். 'டாஸ்மாக்' பார்-ல் விக்கிற விலையை விட கம்மியாவும் இருக்குதாம். அதனால, கூட்டம் அலைமோதிட்டு இருக்குது. போலீஸ்காரங்க கண்டுக்கறதே இல்லை. அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்துறதுக்கு பிளான் பண்ணிட்டு இருக்காங்க,''''கமிஷனர் உத்தரவுனால, போலீஸ்காரங்க, தலையை பிய்ச்சிக்கிட்டு இருக்காங்களாமே...'' என, நோண்டினாள் சித்ரா.''ஆமாக்கா, ஸ்டேஷன்ல கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாதுங்கிறதுக்காக, யாரு, எந்த புகார் கொடுத்தாலும் வழக்கு பதிவு செய்யணும்னு, கறாரா உத்தரவு போட்டிருக்காரு. அதனால, என்ன நடந்ததுன்னு விசாரிக்காமலேயே எப்.ஐ.ஆர்., போடுறாங்க,''''அப்படி, அவசரப்பட்டு வழக்கு போட்டதுனால, ஜோதிடர் குடும்பம் தற்கொலை முயற்சி செஞ்சதுல, இரண்டு பேர் இறந்துட்டாங்க. இப்போ, ஜோதிடர் மேல புகார் கொடுத்த சென்னையை சேர்ந்தவங்க மேல வழக்குப்பதிவு செஞ்சிருக்காங்களாம். ஆரம்பத்திலேயே ஒழுங்கா விசாரிச்சிருந்தா, உயிர் பலி ஏற்பட்டிருக்காதுன்னு போலீஸ்காரங்க பேசிக்கிறாங்க,'' என்றபடி, ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டில் உள்ள பேக்கரி முன், ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள் மித்ரா.சமோசா, பில்டர் காபி ஆர்டர் கொடுத்த சித்ரா, ''துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் ஏரியாவுல மூணு நம்பர் லாட்டரி சேல்ஸ் சக்கைப்போடு போடுதாம். போலீஸ் ஆசி இருக்கறதுனால, சுப்ரமணியம்பாளையத்தை சேர்ந்தவங்க, ஏஜன்டா இருந்து, வடக்கு பகுதி முழுவதும் சேல்ஸ் பண்றாங்களாம்; ஸ்டேஷனுக்கு வேண்டியதை, லாட்டரி சேல்ஸ் பண்ற குரூப் செஞ்சு கொடுக்குதாம்,'' என்றாள்.பில்டர் காபியை உறிஞ்சிய மித்ரா, ''போலீஸ் மேட்டர் போதுங்க. வேற டிபார்ட்மென்ட் மெசேஜ் ஏதும் இல்லையா,'' என கேட்டாள்.''இருக்குப்பா... ஒன்னொன்னா சொல்றேன் கேளு... ''ரேஷன் கடைகளை கட்டுக்குள் வைத்திருக்கிற செக்சன், கலெக்டர் ஆபீசில் செயல்படுது. இங்குள்ள உதவியாளர் ஒருத்தர், லிஸ்ட் போட்டு, கடை வாரியா மாமூல் வசூலிக்கிறதுல கில்லாடி. அதனால, ஆபீசரா யார் வந்தாலும் கட்டுக்குள் வைத்திருப்பாராம்,''''இவரை, சுழற்சி முறையில் அருகாமையில் உள்ள தாலுகாவுக்கு 'டிரான்ஸ்பர்' செஞ்சிருக்காங்க. ருசி கண்ட பூனையாச்சே; போக மாட்டேன்னு, கலெக்டர் ஆபீசுலேயே சுத்திக்கிட்டு இருக்காராம். இவர், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 'மாஜி'யால் நியமிக்கப்பட்டவராம். இவரது இடத்துக்கு நியமிக்கப்பட்ட லேடி, இன்னும் பணியில் சேர முடியாமல் தவிக்கிறாங்க,''மித்ரா, ''அக்கா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, பாரதியார் பல்கலையில் செனட் கூட்டம் நடந்துச்சே; துணைவேந்தர் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பாமே,'' என கிளறினாள்.''அதுவா, செனட் மெம்பர்கள் ஒவ்வொருத்தரும், ஆளாளுக்கு கோரிக்கையை சொல்லிட்டு வந்திருக்காங்க. பார்க்கலாம்; பார்க்கலாம்னு பல்கலை தரப்பில் பதில் சொல்லியிருக்காங்க.அப்போ, கல்லுாரி விரிவுரையாளர்களுக்கு, மாணவ, மாணவியருக்கு தனித்தனியா சிண்டிகேட் உறுப்பினர்களில் பிரதிநிதித்துவம் கேட்டிருக்காங்க.டென்ஷனான துணைவேந்தர், 'இப்படியே... ஒவ்வொருத்தரும் கேட்டா, நாளைக்கு கேன்டீன் நடத்துறவரும் பிரதிநிதித்துவம் கேட்பாரு'ன்னு பேசியிருக்காரு. இதுக்குதான், செனட் மெம்பர்கள் கொந்தளிச்சிட்டாங்களாம்,''''அதெல்லாம் இருக்கட்டும்... கார்ப்பரேஷன் சப்ஜெக்ட் எதுவுமே சொல்லாம... நழுவப் பார்க்கிறீங்களே...''''கார்ப்பரேஷனை பத்தி பேச ஆரம்பிச்சா... குப்பை மலை மாதிரி வந்துட்டே இருக்கும். உதாரணத்துக்கு ஒன்னே ஒன்னு சொல்றேன். 'பில்டிங் அப்ரூவல்' வாங்க முடியாம பொதுமக்கள் அலையுறாங்க; கவுன்சிலர்கள்கிட்ட முட்டி மோதுறாங்க. கவுன்சிலர்களும் அதிகாரிகளை நெருக்குறாங்க. கரன்சி இல்லாமல், கையெழுத்து போடுறதில்லையாம்.மன்றத்தில் 'சவுண்டு' கொடுக்கற கவுன்சிலரா இருந்தா, அவுங்க பரிந்துரைக்கிற பைல்களுக்கு மட்டும் கையெழுத்து போட்டுக் கொடுக்குறாங்க. மீதமுள்ள பைல்கள், கிடப்புல கெடக்குது. 'மேலிடத்துக்கு கொடுக்கணும்'னு சொல்லி, கலெக்சன் பண்றதுக்காகவே, ஒருத்தரை நியமிச்சிருக்காங்களாம். அவரது கைக்கு கரன்சி கை மாறினால் மட்டுமே, பைல் கையெழுத்தாகுதாம்,'' என்றபடி, வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X