முன்ஜாமின் கோரி கனல் கண்ணன் மனு

Added : ஆக 09, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை--ஈ.வெ.ரா., சிலை குறித்து பேசிய விவகாரத்தில், சினிமா 'ஸ்டன்ட் மாஸ்டர்' கனல் கண்ணன் முன்ஜாமின் கோரி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துஉள்ளார்.சென்னை, மதுரவாயலில் இம்மாதம் 1ம் தேதி நடந்த கூட்டத்தில், ஹிந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பங்கேற்றார்.'ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள
முன்ஜாமின் கோரி கனல் கண்ணன் மனு

சென்னை--ஈ.வெ.ரா., சிலை குறித்து பேசிய விவகாரத்தில், சினிமா 'ஸ்டன்ட் மாஸ்டர்' கனல் கண்ணன் முன்ஜாமின் கோரி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துஉள்ளார்.

சென்னை, மதுரவாயலில் இம்மாதம் 1ம் தேதி நடந்த கூட்டத்தில், ஹிந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பங்கேற்றார்.'ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள ஈ.வெ.ரா., சிலையை உடைத்து அகற்றுகிற நாள் தான் ஹிந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்' என, அவர் பேசினார்.இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலர் குமரன் புகார் அளித்தார்.

இந்தப் புகார் தொடர்பாக, சென்னை சைபர் கிரைம் போலீசார், கலகம் செய்ய துாண்டுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய, இரு பிரிவுகளின் கீழ், கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.இந்நிலையில், முன்ஜாமின் கோரி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், கனல் கண்ணன் மனு தாக்கல் செய்து உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
04-செப்-202210:58:23 IST Report Abuse
தமிழன் சாவர்க்கர் வம்சம். கடந்த வாய்தாவில் மன்னிப்பு கேட்டு கெஞ்சினார். இவர்கள் தைரியமெல்லாம் அதிகாரம் இருக்கும் வரைதான். போராட்டத்தில் பிடிபட்டால் உடனே மன்னிப்பு கேட்டு கெஞ்ச வேண்டியது. இது ஒரு பிழைப்பு. மனிதனென்றால் தன்மானம், தைரியம் இருக்கவேண்டும்.
Rate this:
Cancel
09-ஆக-202215:31:12 IST Report Abuse
N Sasikumar Yadhav இந்துமத சடங்குகளையும் தெய்வங்களையும் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பேசலாம் அவர்களை கைது செய்ய முடியாத இந்த விடியாத அரசுக்கு கனல் கண்ணன் அவர்களை கைது செய்ய தைரியம் வந்துவிடுகிறது . இந்துமத துரோக திமுகவுக்கு ஓட்டுபோடும் இந்துக்கள் எப்போது திருந்துவார்களோ என தெரியவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X