அதிக வேலைவாய்ப்புகளை அள்ளித் தந்த சென்னை ஐ.ஐ.டி.,

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: சென்னையில் செயல்படும் ஐ.ஐ.டி., எனப்படும் 'இந்திய தொழில்நுட்ப கழகம், 2021- - 2022 கல்வி ஆண்டில் அதிக வேலை வாய்ப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கியுள்ளது.சென்னை ஐ.ஐ.டி.,யில் 2021- - 2022 கல்வி ஆண்டில் படித்த மாணவர்களில் 1,199 பேரை, 380 நிறுவனங்கள் 'கேம்பஸ் இன்டர்வியூ' மூலம் தேர்ந்தெடுத்துள்ளன. இதேபோல 231 மாணவர்கள் முன் வேலை வாய்ப்பு சலுகைகளையும் பெற்றுள்ளனர். இதோடு
அதிக வேலைவாய்ப்புகள் , அள்ளித் தந்த சென்னை ஐ.ஐ.டி.,

புதுடில்லி: சென்னையில் செயல்படும் ஐ.ஐ.டி., எனப்படும் 'இந்திய தொழில்நுட்ப கழகம், 2021- - 2022 கல்வி ஆண்டில் அதிக வேலை வாய்ப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.,யில் 2021- - 2022 கல்வி ஆண்டில் படித்த மாணவர்களில் 1,199 பேரை, 380 நிறுவனங்கள் 'கேம்பஸ் இன்டர்வியூ' மூலம் தேர்ந்தெடுத்துள்ளன.



இதேபோல 231 மாணவர்கள் முன் வேலை வாய்ப்பு சலுகைகளையும் பெற்றுள்ளனர். இதோடு 'இன்டர்ன்ஷிப்' எனப்படும் நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் மொத்தம் 1,430 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



'இவ்வாறு தேர்வான மாணவர்களின் சராசரி ஊதியம் ஆண்டுக்கு 21.48 லட்சம் ரூபாய். இதுவே அதிகபட்ச ஊதியமாக ஆண்டுக்கு 1.98 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது' என, சென்னை ஐ.ஐ.டி., தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் ஷங்கர் ராம் கூறியதாவது:வேலைவாய்ப்புகள் ஒரு கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கான மதிப்பின் அளவை எடுத்துக்காட்டுகிறது. எங்கள் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சிஅடைகிறோம்.
இதனாலேயே அதிக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வெற்றி, எங்களுடைய பாடத்திட்டங்கள் மற்றும் இணை பாடத்திட்ட வாய்ப்புகளுக்கு சான்று.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
09-ஆக-202214:02:25 IST Report Abuse
sridhar இதெல்லாம் சரி ஆனா நீங்க தொண்ணூற்று எட்டு மாற்கு மேல எடுக்குறவங்கள படிக்க வெச்சு கணக்கு காட்டி என்ன பிரயோஜனம் இதிலே ஆச்சரிப்பட ஒன்னும் இல்லே
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
09-ஆக-202209:17:27 IST Report Abuse
Sampath Kumar மற்ற கல்வி நிறுவங்கள் எல்லாம் தத்தி புண்ணாக்குகளா?
Rate this:
raja - Cotonou,பெனின்
09-ஆக-202212:34:00 IST Report Abuse
rajaதெரு கூட்டும் வேலைக்கும் விண்ணப்பிப்பதிலிருந்தே தெரியவில்லையா தத்திகள் என்று.......
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-ஆக-202208:54:29 IST Report Abuse
Kasimani Baskaran சமச்சீரில் படித்து எத்தனை பேர் ஐஐடி போகிறார்கள் என்று கணக்குப்போட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இங்கு திமுக தத்திகள் பாதிக்கு மேல் சமச்சிர் கல்வியில் வந்தவர்கள் - உதாரணம் அந்த 25 எழுத்து...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X