ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு

Added : ஆக 09, 2022 | |
Advertisement
ஆண்டிபட்டி--வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பெய்த மழை, பெரியாறு அணை நீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் ஆக., 4ல் 70.01 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த உயரம் 71 அடி. பாதுகாப்பு கருதி அணைக்கு உபரியாக வரும் நீர் அன்றைய தினமே 7 பெரிய, சிறிய மதகுகள் வழியாக ஆற்றில் திறந்து விடப்பட்டது. நேற்று
ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு

ஆண்டிபட்டி--வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்த மழை, பெரியாறு அணை நீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் ஆக., 4ல் 70.01 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த உயரம் 71 அடி. பாதுகாப்பு கருதி அணைக்கு உபரியாக வரும் நீர் அன்றைய தினமே 7 பெரிய, சிறிய மதகுகள் வழியாக ஆற்றில் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2761 கன அடியாக திறகக்பட்ட நீர், ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 3000 கன அடியாக உயர்த்தப்பட்டது.

ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு கால்வாய் மூலம் வினாடிக்கு 900 கன அடி நீர் வெளியேறுகிறது. பொதுப்பணி துறையினர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறந்து விட அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று பிற்பகல் 3:10 மணிக்கு ஆற்றின் வழியாக 3000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து ஆக.,14 வரை ஆற்றின் வழியாக ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு நீர் செல்லும். மொத்தம் 1148 மில்லியன் கன அடி நீர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறந்து விட உத்திரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X