சிறுவாணியில் தண்ணீர் வெளியேற்றம்: முதல்வர் வேண்டுகோளுக்கு 'பெப்பே'

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
கோவை-முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கண்டுகொள்ளாமல், மூன்றாம் நாளாக நேற்றும், சிறுவாணி அணையில் மதகுகளை திறந்து கேரள நீர்ப்பாசனத்துறை தண்ணீரை வெளியேற்றியுள்ளது.கேரள வனப்பகுதியில் உள்ள சிறுவாணி அணையில் தேக்கப்படும் தண்ணீரே, கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களின் குடிநீர் ஆதாரம்.அதனால், முழு கொள்ளளவான, 50 அடிக்கு தண்ணீர் தேக்க வேண்டுமென, கேரள முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை-முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கண்டுகொள்ளாமல், மூன்றாம் நாளாக நேற்றும், சிறுவாணி அணையில் மதகுகளை திறந்து கேரள நீர்ப்பாசனத்துறை தண்ணீரை வெளியேற்றியுள்ளது.

கேரள வனப்பகுதியில் உள்ள சிறுவாணி அணையில் தேக்கப்படும் தண்ணீரே, கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களின் குடிநீர் ஆதாரம்.அதனால், முழு கொள்ளளவான, 50 அடிக்கு தண்ணீர் தேக்க வேண்டுமென, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.



latest tamil news


இருப்பினும், பாதுகாப்பு காரணங்களை கூறி, சிறுவாணியில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதை அம்மாநில நீர்ப்பாசனத் துறையினர் தொடர்கின்றனர்.கடந்த மாதம், 8 அடி தண்ணீரை வெளியேற்றினர். இது குடிநீர் வடிகால் வாரியத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், அணை நீர் மட்டம் உயர்ந்தது.மீண்டும் தண்ணீரை வெளியேற்றி விடக்கூடாது என்பதற்காக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழுவினர், கேரளா சென்று நீர்ப்பாசனத் துறையினரை நேரில் சந்தித்து, முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க வலியுறுத்தினர். இதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.


latest tamil news


சனிக்கிழமை, நீர் மட்டம், 43 அடியாக இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் சனிக்கிழமை, 8.6; ஞாயிறு, 4; நேற்று, 9 செ.மீ., மழை பதிவானது. சிற்றருவிகளில் இருந்தும் நீர் வரத்து காணப்படுவதால், நீர் மட்டம் மேலும் உயர்ந்திருக்க வேண்டும்.நேற்று வரை தொடர்ந்து மூன்று நாட்கள் மதகுகளை, 50 செ.மீ., திறந்து தண்ணீரை வெளியேற்றி உள்ளனர். அதனால், நீர் மட்டம், 43 அடியாகவே இருக்கிறது. இது தமிழக அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.இரு மாநில செயலர்கள் மட்டத்தில் பேச்சு நடத்தினால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
09-ஆக-202212:28:55 IST Report Abuse
raja கேடுகெட்ட ஓங்கோல் கொள்ளையன் துக்ளக்கும் அவன் மந்திரியும் என்ன ......
Rate this:
Cancel
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
09-ஆக-202212:01:57 IST Report Abuse
 Ganapathy Subramanian 25 கோடி போதவில்லையாம். விடியா அரசு அதிகமாக கொடுத்தால் தான் இந்த வேண்டுகோள் பரிசீலிக்கப்படுமாம். நம்ப ஊர் கம்மி எம்பி களுக்கு இதற்க்கெல்லாம் நேரம் இல்லை. மத்திய அரசின் திட்டங்களை குறை கூறத்தான் நேரம் இருக்கிறது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
09-ஆக-202211:11:50 IST Report Abuse
duruvasar வெள்ளம் போனா போய்கிட்ட. நம்மட ஸ்டாலினை கேரள மக்கள் சுவீகரிச்சு. அது மதி. பின்ன எந்தா கரையின்னுது. ச்சிரி மோனே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X