ஆதிச்சநல்லுார் முதுமக்கள் தாழியில் தங்க நெற்றிப்பட்டம் கண்டெடுப்பு

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | |
Advertisement
திருநெல்வேலி--துாத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுாரில் மத்திய தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வரும் அகழாய்வில் ஒரு முதுமக்கள் தாழியில் தங்க நெற்றிப்பட்டம் உள்ளிட்ட 20 பொருட்கள் கிடைத்தன.திருநெல்வேலியில் இருந்து திருச்செந்துார் செல்லும் சாலையில் 24 கி.மீ., தூரத்தில் தாமிரபரணி கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர். 1600 ஆண்டுகள் பழமையானது. 1876, 1903ல் அங்கு வெளிநாட்டவரால்
ஆதிச்சநல்லுார் முதுமக்கள் தாழியில் தங்க நெற்றிப்பட்டம் கண்டெடுப்பு

திருநெல்வேலி--துாத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுாரில் மத்திய தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வரும் அகழாய்வில் ஒரு முதுமக்கள் தாழியில் தங்க நெற்றிப்பட்டம் உள்ளிட்ட 20 பொருட்கள் கிடைத்தன.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்துார் செல்லும் சாலையில் 24 கி.மீ., தூரத்தில் தாமிரபரணி கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர். 1600 ஆண்டுகள் பழமையானது. 1876, 1903ல் அங்கு வெளிநாட்டவரால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

2004க்கு பிறகு தற்போது மத்திய தொல்லியல் துறையினர் அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர். சி சைட் பகுதியில் ஒரு முதுமக்கள் தாழியில் 3 செ.மீ., நீளமுள்ள தங்க நெற்றிப் பட்டம் கிடைத்துள்ளது. மேலும் இரண்டு வெண்கல வடிகட்டிகள், 9 அம்புகள், ஒருவாள், ஒரு ஈட்டி, ஒரு சூலம், தொங்க விட்டான் உட்பட 20 பொருட்கள் கிடைத்துள்ளன.

தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் கூறுகையில், இந்த குழியில் புதைக்கப்பட்டவர் தலைவராக இருந்திருக்க கூடும். அவரது உடலுடன் இத்தகைய பொருட்களை வைத்துள்ளனர். மத்திய அரசு ஆதிச்சநல்லூரில் சர்வதேச அருங்காட்சியகத்தை அமைக்க உள்ளது. அதில் இந்த பொருட்கள் இடம் பெறும் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X