பெரியாறில் இருந்து கேரளா செல்லும் நீரை தடுக்க மேலும் ஒரு சுரங்க பாதை தேவை

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
கூடலுார்--பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு வீணாக வெளியேற்றப்படும் தண்ணீரைத் தடுத்து தமிழகப்பகுதிக்கு கொண்டுவர மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியாறு அணை நீரை நம்பி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கரில் இருபோக விவசாயம், குடிநீர் தேவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கூடலுார்--பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு வீணாக வெளியேற்றப்படும் தண்ணீரைத் தடுத்து தமிழகப்பகுதிக்கு கொண்டுவர மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



latest tamil news


பெரியாறு அணை நீரை நம்பி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கரில் இருபோக விவசாயம், குடிநீர் தேவை பூர்த்தியாகி வந்தது. 1979ல் அணை பலம் இழந்ததாக கேரளா புகார் கூறியதைத் தொடர்ந்து நீர்மட்டம் 152 அடியிலிருந்து136 அடியாக குறைக்கப்பட்டது.

அதன்பின் தேனி மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஒருபோக விவசாயம் கூட முழுமையாக செய்ய முடியவில்லை. வழக்கு, பலகட்ட போராட்டத்திற்கு பின் 2014ல் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக நிலை நிறுத்திக் கொள்ளலாம் எனவும், பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடியாக உயர்த்தலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


ரூல் கர்வ்

பேபி அணையை பலப்படுத்த கேரளா தொடர்ந்து பல்வேறு முட்டுக்கட்டைகளை போடுவதால் நீர்மட்டம் 142 அடிக்கு மேல் உயர்த்த வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ரூல்கர்வ் விதிமுறையால் 142 அடி தேக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்.10 முதல் 20 வரையும், நவ. 30 முதல் மார்ச் 31 வரை மட்டுமே நீர்மட்டம் 142 அடியாக நிலை நிறுத்தலாம் என்கிறது ரூல்கர்வ். இதன்மூலம் மழை பெய்யும் பருவங்களில் 142 அடியை தேக்கமுடியாது என்ற நிலை தெளிவாகத் தெரிகிறது. அதனால் மழைப்பொழிவு அதிகரிக்கும்போது அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்களில் இருந்து கேரளப் பகுதிக்கு தண்ணீரை திறந்து விட்டே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.



வீணாக வெளியேறிய நீர்

கேரளப் பகுதிக்கு திறந்து விடப்படும் நீரைப் பயன்படுத்த கேரளாவில் ஒரு சென்ட் விவசாய நிலம்கூட இல்லை. இடுக்கி அணைக்கு சென்று அங்கிருந்து வீணாக கடலில் கலக்கிறது. 2014 தீர்ப்புக்கு பின் அதே ஆண்டு மற்றும் 2015, 2018 ஆண்டுகளில் 142 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. 2018ல் நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியை தாண்டியது. அப்போது கேரளப் பகுதிக்கு 2.40 டி.எம்.சி., தண்ணீர் வீணாக வெளியேறியது. 2021 நவம்பரில் இதேபோல் கேரளப் பகுதிக்கு வீணாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.இதைத் தடுக்க தமிழகப் பகுதியில் உள்ள தற்போதைய சுரங்கப்பாதை தவிர மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து கூடுதல் நீரை தமிழகப்பகுதிக்கு திறந்து விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

ரஞ்சித்குமார், ஐந்து மாட்ட விவசாய சங்க துணைச் செயலாளர், கம்பம்:1958 ல் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையம் துவங்கும் போது பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீர் வெளியேறும் சுரங்கப்பாதை சீரமைக்கப்பட்டது. அதன் மூலம் வரும் தண்ணீர் போர்பை அணையை அடைந்து அங்கிருந்து ராட்சத குழாய் மூலமும் இரைச்சல் பாலம் வழியாகவும் தமிழகத்திற்கு வருகிறது. ஆனால் இதில் அதிகபட்சமாக 2500 கன அடி மட்டுமே தமிழக பகுதிக்கு வெளியேற்ற முடியும்.


latest tamil news


தற்போது கேரளப் பகுதிக்கு தண்ணீர் வீணாக வெளியேறுவதை தவிர்க்க மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் எடுக்க அரசு முன்வர வேண்டும். 2014ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகப் பகுதிக்கு மேலும் கூடுதல் தண்ணீர் திறக்க இரண்டாவது சுரங்கப்பாதை அமைக்கலாம் என்ற ஆலோசனையும் வழங்கியிருந்தது.

ராமராஜ், 18ம் கால்வாய் விவசாய சங்க தலைவர், கோம்பை: ரூல் கர்வ் நடைமுறையால் கேரளாவுக்கு வீணாக தண்ணீர் வெளியேற்றுவது தற்போது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க கூடுதல் தண்ணீர் எடுத்து தேனி மாவட்டத்தில் மேலும் தடுப்பணைகள் கட்டி சேகரித்து வைக்க அரசு முன்வர வேண்டும். இது குறித்து பலமுறை அரசுக்கு வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
09-ஆக-202211:05:35 IST Report Abuse
duruvasar கொள்கை அடிப்படையிலான கூட்டணி என்பதால் இந்த திராவிட மாடல் ஆட்சியில் கேரள, கர்நாடகாவுடனான எந்த நதி நீர் பிரிசனைக்கும் தீர்வு என்பது தமிழக விவசாயிகளுக்கு கனவிலும் கிடைக்காது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என பாதயாத்திரை சென்ற காங்கிரஸ் காரர் சித்தராமையா காலடியில் சிறுத்தை படுத்துகொண்டிருந்ததை பார்த்த பிறகு அனைவருக்கும் இது புரிந்திருக்கும். கொள்கையைவிட இது ஒரு பயங்கரமான லட்சிய கூட்டணி வேறு. தமிழக விவசாயிகள் தோளில் இருக்கும் துண்டை தலையில் போட்டுக்க வேண்டியதுதான்.
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
09-ஆக-202209:24:32 IST Report Abuse
krish உச்சநீதிமன்றம், விவசாய சங்கங்களின் பரிந்துரைகளை ஏற்று புதிய சுரங்கம் அமைத்து நீரை பகிர்வதில் ஏன் அரசு காலம் கடத்துகிறது? உலக வங்கி போன்ற பெரும் நிதி நிறுவனங்கள் இடத்தில் இருந்து கடன் வாங்கியாவது இந்த தொலைநோக்கு பயனளிக்கும் திட்டங்களை அரசு துணிவுடன் நிறைவேற்ற முன்வரவேண்டும். நீர் இல்லாது அமையாது உலகு என்று அலங்கார மேடை பிரச்ச்சாரம்/சொல்லாக்கம் மட்டும் இனி போதாது..துரித செயலாக்கம் தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X