'செஸ் ஒலிம்பியாட்' இன்று நிறைவு விழா

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை :சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி நிறைவு விழா, இன்று நடக்கிறது.சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரத்தில் நடந்து வருகின்றன. இதன் துவக்க விழா, ஜூலை 28ல், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடந்தது. இதில், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. போட்டியின் நிறைவு விழா, இன்று
 செஸ் ஒலிம்பியாட்  இன்று நிறைவு விழா

சென்னை :சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி நிறைவு விழா, இன்று நடக்கிறது.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரத்தில் நடந்து வருகின்றன. இதன் துவக்க விழா, ஜூலை 28ல், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடந்தது. இதில், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.


latest tamil news




போட்டியின் நிறைவு விழா, இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்க உள்ளது. முதல்வர் ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பங்கேற்க உள்ளனர். இதுமட்டுமின்றி செஸ் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் பலரும், நிறைவு விழாவில் பங்கேற்கின்றனர். இதையொட்டி, நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
09-ஆக-202214:46:50 IST Report Abuse
 Ganapathy Subramanian மத்திய அரசின் பிரதிநிதிகள் வந்து எல்லா விழாக்களையும் ஹைஜாக் செய்து விடுவதால் இந்த முறை திரை பிரபலங்கள் மட்டும். நயன்தாரா, கமல், ரஞ்சித், உதையன்னா எல்லோரும் உண்டு. ஆமீர் கான் இருக்கிறாரா?
Rate this:
Cancel
09-ஆக-202210:29:59 IST Report Abuse
அப்புசாமி நல்ல வேளை. பொறுப்பான ஜனாதிபதியாக இந்த வெத்து வேட்டி ஆட்டத்துக்கு முர்மு அவர்கள் வரவில்லை. துவக்கத்துக்கு வந்தவங்க கவனிக்க வேண்டிய விடயம்.
Rate this:
Cancel
09-ஆக-202209:51:46 IST Report Abuse
அப்புசாமி முடிவு விழாவையும் மாமல்லபுரத்திலேயே நடத்தக் கூடாதா? எதுக்கு சென்பைக்கு வந்து ரிடுகளை ம்டக்கி, மக்ஜளின் வயத்தெரிச்சலை கொட்டிக்கிறீங்க? செஸ் போட்டி வேணும்னு மக்கள் அழுதாங்களா என்ன? நல்ல வேளை, மத்திய அரசு ஆளுங்க வெட்டியா இப்போ வரலை. வந்தா நாலு இணை அமைச்சர்களும் வந்து கேம்ப் அடிப்பாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X