வாஞ்சிநாதனுக்கு பேரனா?:வாரிசு ஹரிகரசுப்பிரமணியன் விளக்கம்

Added : ஆக 09, 2022 | |
Advertisement
மதுரை-பிரதமர் மோடி சமீபத்தில், 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு புகழாரம் சூட்டி இருந்தார். இதற்கு, 'வாஞ்சிநாதனின் பேரன் என்ற வகையில் நன்றி தெரிவிப்பதாக' விருத்தாச்சலத்தில் மதியழகன் என்பவர் அளித்த பேட்டி, ஆக., 1, 'தினமலர்' நாளிதழில் வெளியானது. .இது குறித்து, திருநெல்வேலியில் வசிக்கும் வாஞ்சிநாதனின் வாரிசு கோ.ஹரிஹரசுப்ரமணியன்

மதுரை-பிரதமர் மோடி சமீபத்தில், 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு புகழாரம் சூட்டி இருந்தார். இதற்கு, 'வாஞ்சிநாதனின் பேரன் என்ற வகையில் நன்றி தெரிவிப்பதாக' விருத்தாச்சலத்தில் மதியழகன் என்பவர் அளித்த பேட்டி, ஆக., 1, 'தினமலர்' நாளிதழில் வெளியானது.

.இது குறித்து, திருநெல்வேலியில் வசிக்கும் வாஞ்சிநாதனின் வாரிசு கோ.ஹரிஹரசுப்ரமணியன் கூறியிருப்பதாவது:வாஞ்சி நாதனின் மகள் வழி பேரன் என, இந்த நபர் தன்னை அறிமுகப்படுத்தி, 2017 ஆகஸ்டில், 'தி இந்து' நாளிதழில் அளித்த பேட்டி பலரின் கண்டனத்திற்கும் உள்ளானது.



இந்த நபரை தென்காசி முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கட்ரமணன் சந்தித்து, இவர் அளித்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என, ஆதாரங்களுடன் 'தி இந்து' நாளிதழுக்கு தெரிவித்துஇருந்தார்.வாஞ்சியின் மனைவி பொன்னம்மாள், தன் இறுதி நாட்களை சென்னையில் அவரது தந்தை வழி உறவினர்களுடன் கழித்துள்ளார்.



அவர், 1967ல் காலமானார். அவரது இறுதி காரியங்களை செய்ய என் தந்தையே விபரங்களை தெரிவித்து உள்ளார்.வாஞ்சிநாதனுக்கு பெண் குழந்தை பிறந்ததும், அக்குழந்தை வாஞ்சியின் மரணத்திற்கு முன்பே இறந்ததை, வாஞ்சியின் வரலாற்றை தொகுத்து எழுதிய ரகமி, செங்கோட்டைக்கு நேரில் சென்று பலரையும் தொடர்பு கொண்டு பதிவு செய்துள்ளார்.மதியழகன் என்பவர் கூறுவது வாஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த எங்களுக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X