அடுத்தடுத்து விழுந்த மரங்கள் வீடுகள் சேதம்; தொழிலாளி பலி| Dinamalar

அடுத்தடுத்து விழுந்த மரங்கள் வீடுகள் சேதம்; தொழிலாளி பலி

Added : ஆக 09, 2022 | |
ஊட்டி--பலத்த காற்றுக்கு ஊட்டியில் அடுத்தடுத்து மரங்கள் விழுந்து வீடுகள் சேதமாகின; கூடலுாரில் பெண் தொழிலாளி உயிரிழந்தார்.நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தீவிர மழை காரணமாக, ஊட்டி - மஞ்சூர் சாலையில் ராட்சத கற்பூர மரம் சாலையின் குறுக்கே விழுந்து, ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே இடத்தில் வீட்டின் மீது மரம் விழுந்தது. யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக
அடுத்தடுத்து விழுந்த மரங்கள் வீடுகள் சேதம்; தொழிலாளி பலி

ஊட்டி--பலத்த காற்றுக்கு ஊட்டியில் அடுத்தடுத்து மரங்கள் விழுந்து வீடுகள் சேதமாகின; கூடலுாரில் பெண் தொழிலாளி உயிரிழந்தார்.நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தீவிர மழை காரணமாக, ஊட்டி - மஞ்சூர் சாலையில் ராட்சத கற்பூர மரம் சாலையின் குறுக்கே விழுந்து, ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே இடத்தில் வீட்டின் மீது மரம் விழுந்தது. யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.இத்தலார் சாலை, எல்லக்கண்டியில், பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டு, இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நெடுஞ்சாலைத் துறையினர், 'பொக்லைன்' உதவியுடன் மண்சரிவை அகற்றிய பின் போக்குவரத்து சீரானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.கூடலுார் ஓவேலி, கெல்லி பகுதியில் உள்ள தனியார் காபி எஸ்டேட்டில் வேலை செய்து கொண்டிருந்த சுமதி, 48, மருதம்மாள், 54, ஆகியோர் மீது திடீரென மரம் விழுந்தது.சுமதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.காயமடைந்த மருதம்மாள் ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


நுாலகம் இடிந்தது!

கூடலுாரில் பழமையான கிளை நுாலக கட்டடம், நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. உள்ளே இருந்த, 80 ஆயிரம் புத்தகங்களில் பெரும்பாலான அரிய புத்தகங்கள் சேதமாகின. நுாலகத்தில் யாரும் இல்லை.வாசகர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். கூடலுார் ஆர்.டி.ஓ., சரவண கண்ணன், தாசில்தார் சித்தராஜ் ஆய்வு செய்து புத்தகங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தனர்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X